Connect with us

Cinema News

கீர்த்தி சுரேஷ் ஹீரோவுக்கு குழந்தை பொறக்கப் போகுது!.. சந்தோஷமான அறிவிப்பை வெளியிட்ட அட்லீ பட நடிகர்!

அட்லீ தயாரிப்பில் பாலிவுட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அந்த படத்தில் விஜய்க்கு பதிலாக பாலிவுட்டில் ஹீரோவாக வருண் தவான் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் வருண் தவான் மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியை மனைவியின் கர்ப்ப வயிற்றுக்கு முத்தம் கொடுத்து அறிவித்துள்ளார்.

36 வயதாகும் வருண் தவான் பேபி ஜான் எனும் டைட்டிலில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வரும் நிலையில், உண்மையிலேயே அவருக்கு பேபி பொறக்கப் போகிறது.

இதையும் படிங்க: இது என்னடா கூத்தா இருக்கு!.. லியோ தெலுங்கு படம்.. மாஸ்டர் மலையாள படமா?.. அட்லீக்கே அண்ணனா லோகி?..

கடந்த 2021ம் ஆண்டு தான் நடாஷா தலால் என்பவரை கோலாகலமாக திருமணம் செய்துக் கொண்டார். நடிகைகளே 40 வயதானாலும் பாலிவுட்டில் திருமணம் செய்துக் கொள்ளாமல் நடித்து வரும் நிலையில், 33 வயதிலேயே அழகாக திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும் நடத்தி வருகிறார். ஹீரோக்கள் திருமணம் ஆனால், பிரச்சனை இல்லை. ஆனால், ஹீரோயின்கள் திருமணம் ஆனால், மார்க்கெட் போய் விடும் என்கிற எண்ணம் இன்னமும் பலருக்கு உள்ளது.

திரிஷா, சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் எல்லாம் அதனால் தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. வருண் தவான் தனது மனைவியின் வயிற்றில் வளரும் தனது வாரிசுக்கு முத்தம் கொடுத்து “நாங்கள் கர்ப்பமாகிட்டோம்” என பதிவிட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் அப்படி கேட்பார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. அழுதே விட்டேன்.. உருகும் சிவக்குமார்….

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top