Cinema History
ஃபிலிமே இல்லாம ஷூட்டிங்! வடிவேல் காமெடி மாதிரில்ல இருக்கு!. கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பாரதிராஜா!
தமிழ் திரையுலகம் பல இயக்குனர்களை பார்த்திருக்கிறது. ஆனால், அதில் தடம் பதித்துவிட்டு போன இயக்குனர்கள் சிலர்தான். அவர்களின் படைப்புகள் மட்டுமே காலத்தை கடந்தும் வாழும். எல்லோராலும் எப்போதும் நினைவு கூறப்பட்டு வரும். அறிமுகமாகும் இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக அவர்களின் படங்கள் இருக்கும்.
அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர்தான் பாரதிராஜா. பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனர் இவர். கிராமத்து மனிதர்கள் வாழ்க்கையை அப்படியே தனது படங்களில் பிரதிபலித்தவர் இவர்.
இதையும் படிங்க: இதனாலதான் உன் படத்துக்கு மியூசிக் போடல!.. எடக்கு மடக்கு பார்த்திபனையே மடக்கிய இளையராஜா..
பாரதிராஜாவால் கிராமத்து படங்களை மட்டுமே எடுக்க முடியும் என சிலர் பேசிய போது ஒரு கைதியின் டைரி, டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்று காட்டியவர் இவர். அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, காதல் ஓவியம், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இயக்கியவர் இவர்.
கமலுக்கும் பாரதிராஜாவுக்கும் எப்போதும் ஒரு நல்ல நட்பு உண்டு. பாரதிராஜா உதவி இயக்குனராக வேலை செய்தபோதே இவர் கண்டிப்பாக பெரிய இயக்குனார் ஆவார் என்பதை அப்போதே கணித்தவர் கமல்ஹாசன். அதனால்தான் ‘என் முதல் படத்தில் நீ நடிக்க வேண்டும்’ என பாரதிராஜா கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார் கமல்ஹாசன்.
இதையும் படிங்க: அத மட்டும் நான் எப்பவுமே செய்ய மாட்டேன்!.. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு கொடுத்த விஜய்!..
பதினாறு வயதினிலே படம் எடுக்கும்போது பல பிரச்சனைகளையும் சந்தித்தார் பாரதிராஜா. மிகவும் குறைந்த பட்ஜெட்டில்தான் இந்த படம் உருவானது. சில சமயம் பிலிம் வாங்க கூட தயாரிப்பாளரிடம் பணம் இருக்காது. ஆனால், ஷூட்டிங் நடக்காவிட்டால் அசிங்கமாகி விடும் என நினைத்த பாரதிராஜாவை கேமராவில் பிலிமே இல்லாமல் கமலை வைத்து காட்சிகள் எடுத்திருக்கிறார்.
‘மீதி காட்சிகளை நாளை எடுப்போம்’ என சொல்லி அனுப்பிவிடுவாராம். கமலுக்கு இது தெரிந்தாலும் அதற்காக பாரதிராஜா மீது அவர் கோபப்படமால் ரசித்திருக்கிறார். அந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து முடித்து கொடுத்திருக்கிறார். அதேபோல், ரஜினிக்கு 3 ஆயிரம் சம்பளம் பேசிய பாரதிராஜா அவருக்கு 2500 மட்டுமே கொடுத்திருக்கிறார். கடைசிவரை மீது 500 ரூபாயை கொடுக்கவே இல்லை. ரஜினியும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது என்னடா கூத்தா இருக்கு!.. லியோ தெலுங்கு படம்.. மாஸ்டர் மலையாள படமா?.. அட்லீக்கே அண்ணனா லோகி?..