3 படத்துக்கு சம்பளம் என்னாச்சு? கமலை நம்பி கெரியரை தியாகம் செய்த நடிகை – உண்மையிலேயே கெத்துதான்

Published on: February 19, 2024
kamal
---Advertisement---

Actress Aishwarya Lakshmi: தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான நடிகை என்ற பெயருக்கு சொந்தக்காரராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி தமிழிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

முதன் முதலில் ஆக்‌ஷன் என்ற படத்தின் மூலம்தான் தமிழில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. அதன் பிறகு ஜெகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து சிறந்த தென்னிந்திய நடிகைக்கான பிலிம் பேர் விருதை வென்றார். பல படங்களில் நடித்தாலும் இவரை உலகறிய செய்த படம் பொன்னியின் செல்வன் திரைப்படம்.

இதையும் படிங்க: 75 கோடி கடனை தயாரிப்பாளர் தலையில் கட்டிய எஸ்.கே. ஐயோ பாவம் மனுஷன்!…

அந்தப் படத்தில் பூங்குழலியாக நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு கட்டா குஸ்தி படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து அனைவரின் நற்பெயரை பெற்றார். இப்போது கோலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கமிட் ஆகியிருக்கிறார். அந்தப் படத்தை 96 பிரேமின் மனைவிதான் எடுக்க இருக்கிறாராம். அந்தப் படத்தில் கார் ரேஸராக நடிக்கிறாராம் ஐஸ்வர்யா லட்சுமி. கடைசியாக கிடைத்த தகவலின் படி கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இதையும் படிங்க:வாடிவாசலை ட்ராப் செஞ்சிடலாமா? தயாரிப்பாளரிடம் கேட்ட வெற்றிமாறன்.. திடீரென கிளம்பிய புது ஐடியா…

இந்தப் படத்தில் நடிப்பதற்காக மெய்யழகன் படத்தை தவறவிட்டிருக்கிறார். அதுபோக ஏ.எல்.விஜய் இயக்கும் ஒரு புதிய படத்திலும் இவர் நடிக்க வேண்டியதாம். அந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணியிருக்கிறார். மேலும் இன்னொரு படத்தையும் தவறவிட்டிருக்கிறார். காரணம் தக் லைஃப் படத்தில் முழு கவனத்துடன் நடிக்க வேண்டும் என்பதற்காக.

aish
aish

இதை அறிந்த ரசிகர்கள் ஒரு படத்திற்காக மூன்று படங்களின் சம்பளத்தை விட்டு விட்டாரே ஐஸ்வர்ய லட்சுமி என்று கூறிவருகிறார்கள். ஆனால் தக் லைஃப் படம் வெளியாகும் போது ஐஸ்வர்ய லட்சுமிக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இயக்குனர் சொன்னதை அப்படியே செஞ்ச ரஜினிகாந்த்… ஓவர் சீன் போட்ட இன்னொரு நடிகர்..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.