Cinema History
பாக்யராஜால் பள்ளியை விட்டே வெளியேறிய பானுப்பிரியா… அதன்பின் என்ன நடந்ததுன்னு தெரியுமா?
80களில் பிரபல நடிகை பானுப்பிரியா. அப்போது இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்த கனவுக்கன்னிகளில் அவரும் ஒருவர். ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டம் ரங்கம்பேட்டை தான் அவரது சொந்த ஊர். 15.1.1967ல் பிறந்தார். 17வது வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். அவரது முதல் தமிழ்ப்படம் 1983ல் வெளியான மெல்லப்பேசுங்கள்.
தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார். 1986ல் பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜிதேந்திரா, ரஜினிகாந்த், ரிஷிகபூர், பூனம் தில்லான் ஆகியோருடன் இணைந்து நடித்தார். 1998ல் ஆதர்ஷ் கௌஷல் என்ற ஒரு அமெரிக்க கிராபிக்ஸ் இன்ஜினியரை மணந்தார். தொடர்ந்து அவரை விட்டுவிட்டு 7 ஆண்டுகளில் சென்னை திரும்பி விட்டாராம்.
பேட்டி ஒன்றில் கணவருடன் அடிக்கடி போனில் பேசுவாராம். அவர் மீண்டும் வேண்டும் என்று கூறியிருந்தார். பானுப்பிரியாவின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனராம். எதிர்ப்பை மீறித் தான் 14.6.1998ல் பானுப்பிரியா கலிபோர்னியாவில் திருமணம் செய்தாராம்.
திருமணமாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு 2003ல் அபிநயா என்ற மகள் பிறந்தாள். அடுத்த 2 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்தது. விவாகரத்து செய்தனர். அதன்பிறகு மகளுடன் சென்னைக்கு வந்துவிட்டாராம் பானுப்பிரியா.
இவரது உண்மையான பெயர் மங்காபானு. பள்ளியில் படிக்கும்போது பாக்யராஜ் அவரைத் தேடி வந்தாராம். அவரது நடனத்தைப் பார்த்து தேர்வு செய்து விட்டாராம். அவர் போட்டோஷூட் எடுத்ததும், சின்ன வயதுடன் இருந்ததால் பானுப்பிரியாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம்.
அப்போது பானுப்பிரியா பள்ளித் தோழிகளிடம் எல்லாம் நான் நடிக்கப் போறேன் என பெருமையாகச் சொன்னாராம். ஆனால் படத்தில் இருந்து நீக்கியதால் அது அவமானமாகி விடும் என பள்ளிக்கே செல்லாமல் பள்ளியை விட்டே வெளியேறி விட்டாராம். அதன்பிறகும் தொடர்ந்து படவாய்ப்புக்காக முயற்சி செய்ய, 1983ல் மெல்ல பேசுங்கள் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு தெலுங்கில் அவருக்கு சித்தாரா பட வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அவரது முதல் வெற்றிப் படம்.
பேட்டி ஒன்றில், தான் படங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே தனது பெயருடன் பிரியாவை சேர்த்தாராம். அப்படித்தான் பானுப்பிரியா ஆனார். இவரது சகோதரி பெயர் சாந்திப்பிரியா. அவரும் நடிகை தான். சினிமாவுக்காக நிஷாந்தி என்று பெயர் வைத்தார். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் பானுப்பிரியா போல பிரபலமாகவில்லை. 1986ல் தோஸ்தி துஷ்மணி என்ற இந்திப்படத்தில் அறிமுகமானார். இதில் ஜிதேந்திரா, ரஜினிகாந்த், ரிஷிகபூர், பூனம் தில்லான் உள்பட பலர் நடித்திருந்தனர்.