Cinema History
ராஜ்கிரணுக்காக எல்லோரிடமும் சண்டை போட்ட தனுஷ்!.. அட இவ்வளவு நடந்திருக்கா!…
Dhanush: நடிகராக வெற்றி பெற்ற தனுஷ் இயக்கத்தில் முதன் முதலில் ரிலீஸ் ஆன திரைப்படம் பவர் பாண்டி. அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியிருந்தது. அப்படத்தில் நடிக்கும் போது ராஜ்கிரணுக்கும், தனுஷுக்கும் இடையே நடந்த சில சுவாரசிய சம்பவங்கள் தற்போது ரிலீசாகி இருக்கிறது.
நடிகராக உச்சத்தில் இருக்கும்போதே தனுஷுக்கு டைரக்ட் செய்யும் ஆசை வந்ததாம். அதை தள்ளி போட நினைக்காதவர் இயக்கிய முதல் திரைப்படம் தான் பவர் பாண்டி. இப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: ஐயா உங்ககிட்ட நாங்க கேட்டது ஒரே ஒரு ‘க்’ தான? .. ட்ரோலுக்கு உள்ளான விஜய் கட்சியின் வைரல் போஸ்டர்…
அப்படத்தில் ராஜ்கிரணை ஹீரோவாக போட முடிவு செய்ததற்கு பின்னர் ஒரு மிகப்பெரிய காரணம் இருக்கிறதாம். அதாவது தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவின் முதல் படம் என் ராசாவின் மனசிலே. இப்படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்திருந்தார். கஸ்தூரிராஜாவின் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஏணியாக அமைந்தது இப்படம் தான்.
அப்போதிலிருந்தே தனுஷ், ராஜ்கிரணுக்கும் ஒரு நெருக்கமான உறவு இருந்ததாம். தனுஷ் ராஜ்கிரணை மாமா என்றும், ராஜ்கிரணை தனுஷை மருமகன் என்றும் அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அப்பாவுக்கு வாழ்க்கை கொடுத்த ராஜ்கிரணை தனது முதல் ஹீரோவாக மாற்றினார் தனுஷ். முதல் நாள் படப்பிடிப்பில் தனுஷின் டைரக்டர் வேலையை பார்த்த ராஜ்கிரண் ஆச்சரியமாகிவிட்டாராம்.
மேலும் ஷூட்டிங் சமயத்தில் ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இருக்கும் பிரேக்கில் சிகரெட் பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ராஜ்கிரண். அப்போது ஒரு காட்சியின் பிரேக்கில் தள்ளி நின்று சிகரெட் புகைத்து கொண்டிருந்தார் ராஜ்கிரண். ஆனால் ஒரு அசோசியேட் அவரிடம் சென்று சாட் ரெடி உடனே வாங்க என அவரை அவசரப்படுத்தி இருக்கின்றனர். அவரும் அவசரமாக ஓடிவந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகர் சங்கத்தை நம்பி மோசம் போன சேரன்! த்ரிஷாவுக்காக பேசி வீணாப் போச்சோ?
இதை பார்த்த தனுஷோ தன்னுடைய அசோசியேட்டை அழைத்து அவர் மிகப்பெரிய மூத்த நடிகர். அவரை எதற்காக அவசரப்படுத்தினாய். என்றாராம். இதனால் ராஜ்கிரணுக்கு ஒரே நேரத்தில் சந்தோஷமாகவும், கொஞ்சம் வெட்கமாகவும் இருந்ததாம். அதாவது ஷூட்டிங் சமயத்தில் சிகரெட் பிடித்ததால் தான் இந்த பிரச்சனை என்பதால் வெட்கமும், தன்னை தனுஷ் எவ்வளவு பெரிய உயரத்தில் வைத்திருக்கிறார் என்பதால் சந்தோஷத்தையும் கொண்டாராம்.
அது போல ஒரு சமயத்தில் உதவி இயக்குனர் ஒருவர் வேகமாக செல்லும்போது ராஜ்கிரணை இடித்து விட்டார். இதனால் கையில் அடிபட்டு ராஜ்கிரண் நின்ற போது தனுஷ் அதை பார்த்துவிட்டார். அப்போதும் அந்த உதவி இயக்குனரை மன்னிப்பு கேள் என அழைத்து வந்து நிறுத்தினாராம்.
இதையும் படிங்க: மனைவி, பிள்ளைகளை விட்டு சாமியாராக சென்ற ரஜினிகாந்த்… திரும்பி வர காரணம் இந்த இயக்குனர் தானாம்!…