Cinema News
ஒருவழியா ரிலீஸ் தேதியை குறித்த ஷங்கர்!.. பிரம்மாண்டமாக வெளிவரும் இந்தியன் 2..
ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996ம் வருடம் வெளிவந்த திரைப்படம் இந்தியன். லஞ்சத்துக்கு எதிராக வயதான சுதந்திர போரட்ட தியாகி ஒருவர் பொங்கி எழுதுவதை திரைக்கதையாக உருவாக்கியிருந்தார் ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் 20 வருடங்களுக்கு பின் சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்கினார் ஷங்கர். கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஆனால், பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
இதையும் படிங்க: கோட் ரிலீசுக்கு தேதி குறித்த வெங்கட்பிரபு!. ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு!.. ஐயோ பாவம்!..
தற்போது இப்படம் முடிவடையும் நிலையை எட்டியிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் எனில் இந்தியன் 3வது பாகத்துக்கான காட்சிகளையும் சேர்த்து ஷங்கர் எடுத்து முடித்துவிட்டார் என்பதுதான். எண்ணூர் துறைமுகத்தில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் பங்குபெறும் ஒரு பாடல் காட்சி பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். இந்த பாடலில் சுமார் 500 நடன கலைஞர்கள் நடனமாடவுள்ளனர்.
இதோடு, இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பின் கிராபிக்ஸ் உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து மே மாதம் 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோடை விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூலுக்கு சிக்கல் இருக்காது.
இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’னு எந்த நேரத்துல பேர வச்சாங்கேளோ? அடுத்த பிரச்சினை.. இது தீரவே தீராதே
அதோடு, கமலின் விக்ரம் படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்ட நிலையில் இந்தியன் 2 படமும் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம் சரண் நடிக்க துவங்கிய படம் இது.
ஆனால், அதுவும் இப்போது வரை முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. விரைவில் இந்த 2 படங்களையும் ஷங்கர் முடித்துவிட்டு இந்தியன் 3 ரிலீஸ் தொடர்பான வேலைகளை செய்ய துவங்குவார் என சொல்லப்படுகிறது. விக்ரமுக்கு பின் இந்தியன் 2 படம் கமலுக்கு நல்ல மைலேஜை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.