Cinema News
ஹாட்ரிக் பிளாப்!.. இப்படியே போனா மார்கெட் காலிதான்!.. சுதாரிப்பாரா ஜெயம் ரவி?!..
ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. முதல் படம் ஹிட் என்பதால் அந்த படத்தின் பெயர் அவரின் பெயருக்கு முன்னால் சேர்ந்துகொண்டது. அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்தார். பெரிய வசூல் இல்லை என்றாலும் மினிமம் கேரண்டி உள்ள ஒரு ஹீரோவாக மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார்.
துவக்கத்தில் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கு படங்களை ரீமேக் செய்து அதில் நடித்து வந்த ஜெயம்ரவி அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். கோமாளி படம் அவர் நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்றது. மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: ஒருவழியா ரிலீஸ் தேதியை குறித்த ஷங்கர்!.. பிரம்மாண்டமாக வெளிவரும் இந்தியன் 2..
அதன்பின் மளமளவென பல படங்களையும் புக் செய்தார் ஜெயம் ரவி. ஆனால், அவை ஹிட் படங்களாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு பின் வெளிவந்த அகிலன் படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி அடைந்தது. கப்பலில் நடக்கும் வியாபாரங்கள் தொடர்பாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
அப்படத்திற்கு பின் வெளியான பொன்னியின் செல்வன் 2 படமும் முதல் பாகம் போல வெற்றியை பெறவில்லை. அதன்பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், இப்படத்தை என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஜ்மல் இயக்கியிருந்தார். ஆனால், இந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.
இதையும் படிங்க: கோட் ரிலீசுக்கு தேதி குறித்த வெங்கட்பிரபு!. ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு!.. ஐயோ பாவம்!..
அதன்பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் சைரன். இத்தனைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் என 2 கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஆனால், இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டது. இப்படி அகிலன், இறைவன், சைரன் என தொடர்ந்து ஹாட்ரிக் தோல்விப்படங்களை ஜெயம் ரவி கொடுத்திருக்கிறார்.
அடுத்து பிரதர், ஜெனி, தக் லைப் ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இதில், எந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’னு எந்த நேரத்துல பேர வச்சாங்கேளோ? அடுத்த பிரச்சினை.. இது தீரவே தீராதே