Cinema History
12 நாட்கள் ஒரே பேண்ட் ஷர்ட்!.. அழுக்கு பையனாக இருந்த எஸ்.ஜே.சூர்யா!.. எல்லாம் அதுக்காகத்தான்!…
சினிமாவில் இயக்குனராகும் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபம் இல்லை. பல வருடங்கள் போராட வேண்டு. ஒரு இயக்குனரிடம் உதவியாளராக சேர வேண்டும். அதுவே குதிரை கொம்புதான். அதற்கு சில வருடங்கள் ஆகும். உதவி இயக்குனராக சில படங்களில் வேலை செய்தபின் ஒரு கதையை உருவாக்கி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களை துரத்த வேண்டும்.
அப்படியே படம் கிடைத்தாலும் அது வெற்றிப்படமாக அமைய வேண்டும். இப்படித்தான் திரையுலகில் ஒரு இயக்குனர் உருவாக முடியும். அப்படி உருவான ஒருவர்தான் எஸ்.ஜே.சூர்யா. முருகதாஸ், வசந்த் உள்ளிட்ட சில இயக்குனர்களின் படங்களில் வேலை செய்தவர். இயக்குனராக ஆசைப்பட்ட எஸ்.ஜே.சூர்யா ஒருகதையை தயார் செய்து அஜித்திடம் சொல்ல அது அவருக்கு பிடித்துப்போய் உருவான படம்தான் வாலி.
இதையும் படிங்க: அஜித்தை தவிற வேறெந்த நடிகரும் அத செய்யல! இம்பிரஸ் ஆன கிரண்.. அதிலிருந்தே அவர் ஸ்பெஷல்தான்
பல சிரமங்களுக்கு இடையில்தான் இந்த படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க தேவா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடிக்க படமும் வெற்றி அடைந்தது. அதன்பின் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யார். இந்த படமும் சூப்பர் ஹிட். படத்தின் இறுதிக்காட்சி என்ன என்பதை படத்தின் முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு படத்தை எடுத்த முதல் இயக்குனர் இவர்தான்.
அதன்பின் அன்பே ஆருயிரே, இசை, என சில படங்களை இயக்கி நடித்தார். ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை. எனவே, சினிமாவில் நடிக்க துவங்கினார். பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். இப்போது பெரிய பெரிய படங்களில் நடிக்கும் வில்லன் நடிகராக மாறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித் மச்சானுடன் ஷகீலாவுக்கு வந்த காதல்… திருமண நேரத்தில் நடந்த பிரேக்அப்… புதுக்கதையா இருக்கே?..
இப்போது பல கோடி சம்பளம் வாங்கும் எஸ்.ஜே.சூர்யா துவக்கத்தில் பைக் வாங்க கூட காசு இல்லாமல் இருந்தவர்தான். ஆசை படத்தில் அவர் வேலை செய்த போது 12 நாட்கள் டெல்லி மற்றும் குலுமனாலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடிக்கவிருந்தது. ஆனால், பட்ஜெட் காரணமாக எல்லா உதவி இயக்குனர்களையும் அழைத்து செல்ல முடியாத நிலை. ஆனால், எப்படியாவது நாமும் போய்விட வேண்டும் என நினைத்த எஸ்.ஜே.சூர்யா படத்தில் வரும் நாய்க்குட்டியை பராமரிப்பதற்காக சென்றிருக்கிறார்.
லக்கேஜ் எதையும் எடுத்து வராததால் அந்த 12 நாட்களும் ஒரே பேண்ட் சர்ட்டை அணிந்தே ஓட்டியிருக்கிறார். சினிமாவின் மீது அவருக்கு இருந்த தாகத்தையே இந்த சம்பவம் நமக்கு காட்டுகிறது. அஜித்துக்கு முதலில் பைக் மற்றும் காரை வாங்கி கொடுத்தவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் விஷயத்துல இப்படி நடந்துச்சுனா வீடியோவே போடுவாரு! யாரு அஜித்தா? பிரபலம் சொன்ன தகவல்