வாழ்க்கையில நான் பண்ண பெரிய தப்பே அந்த படம்தான்!.. பஞ்சதந்திரம் பற்றி இப்படி சொல்லிட்டாரே!..

Published on: March 2, 2024
pancha
---Advertisement---

Kamalhaasan: சில திரைப்படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் லாபத்தை கொடுக்கும். சில படங்கள் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் லாபத்தை கொடுக்கும். ஆனால், தயாரிப்பாளருக்கு லாபம் இருக்காது.

சில படங்களை தயாரிப்பாளர் ஓரளவுக்கு லாபத்தை வைத்து விற்றுவிடுவார். ஆனால், தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுவிடும். ரஜினி தயாரித்து, நடித்து வெளியான பாபா படம் கூட அப்படித்தான். அதனால்தான் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினிகாந்த் திருப்பி கொடுத்தார்.

இதையும் படிங்க: மஞ்சுமல் பாய்ஸ் இருக்கட்டும்… குணாவே காப்பிதான்!.. கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.

இப்படி திரையுலகில் பல உதாரணங்கள் இருக்கிறது. ரசிகர்கள் பெரிதும் ரசித்த வடிவேல் காமெடி நிறைந்த வின்னர் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து படம் தோல்வி அடைந்துவிட்டால் தயாரிப்பாளரின் கதி அவ்வளவுதான்.

மைக்கேல் ராயப்பன் எனும் தயாரிப்பாளர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற படத்தை தயாரித்தார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் படமோ படு தோல்வி. 10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துவிட்டு கடந்த 5 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறார். ஒன்றும் நடக்கவில்லை.

இதையும் படிங்க:  தனுஷ் நடிக்கும் படத்தில் கமல், ரஜினி, சிம்பு? இதெல்லாம் வெறும் கனவா இல்லை நனவா?..

பருத்தீவீரன் எனும் சூப்பர் ஹிட் படத்தை தயாரித்ததில் ஒன்றரை கோடி ரூபாய் இதுவரை இயக்குனர் அமீருக்கு கொடுக்கப்படவில்லை. 17 வருடங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து வருகிறார். இந்நிலையில், கமல் நடிப்பில் உருவான பம்மல் கே சம்மந்தம் மற்றும் பஞ்ச தந்திரம் ஆகிய படங்களை தயாரித்த பி.எல்.தேனப்பன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு போட்டி கொடுத்தார்.

பம்மல் கே சம்பந்தம் படத்தை விற்பனை செய்ததில் தப்பித்துவிட்டேன். ஆனால், பஞ்சதந்திரம் படம் எனக்கு லாபத்தை கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த படத்தால் எனக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது’ என கூறியிருக்கிறார். அதேநேரம், கே.எஸ்.ரவிக்குமார் – கமல் கூட்டணியில் வந்த படங்களில் இந்த படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.