Cinema News
அந்த பாட்டு எனக்கு கிடக்கலயேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்!.. எஸ்.பி.பி கொடுத்த பேட்டி…
தமிழ் சினிமாவில் பல பாடகர்கள் ரசிகர்களின் மனதை வென்றிருந்தாலும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. அவரை ஒரு ஆண் குயில் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு தேன் தடவிய குரலில் பாடி கேட்பவர்களை மயங்க வைத்தவர்.
ஆந்திரா சொந்த மாநிலம், தமிழ் எழுத படிக்க தெரியாது என்றாலும் தமிழ் மொழியை கற்றுகொண்டு அவர் பாடிய பாடல்களை சாதரணமாக கடந்து போய்விட முடியாது. டி.எம்.சவுந்தரராஜன் பீக்கில் இருந்த போது எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோருக்கு பாடியவர் இவர்.
இதையும் படிங்க: எல்லாத்துக்கும் முன்னோடியா இருக்கும் கமலுக்கே தண்ணி காட்டிய விஜய்! மரண பயத்தை காட்டிய தளபதி
தன்னுடைய அடிமைப்பெண் படத்தில் எஸ்.பி.பிக்காக காத்திருந்து அவரை பாட வைத்தார் எம்.ஜி.ஆர். அதோடு, பல தயாரிப்பாளர்களையும் அழைத்து அவருக்கு வாய்ப்பு கொடுக்க சொன்னார். இளையராஜாவின் வரவுக்கு பின் 80,90களில் எஸ்.பி.பி பல ஆயிரம் பாடல்களை பாடினார்.
மோகன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுக்கும் பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 30 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை செய்திருக்கிறார். இசை ரசிகர்களின் மனதில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் எஸ்.பி.பி.
இதையும் படிங்க: இப்படி எல்லாரும் பாட்டு பாடிட்டு இருக்கீங்களே… கடுப்பான விஜயா, ரோகினி… நாங்களும் தான்!…
80களில் இளையராஜாவின் இசையில் அவர் பல பாடல்களை பாடியபோது அவருக்கு போட்டியாக இருந்தவர் யேசுதாஸ். எஸ்.பி.பி அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தி வெளிநாட்டுக்கும் போய்விடுவார். எனவே, அவர் பாடவேண்டிய பாடல்கள் மனோ, மலேசியா வாசுதேவன் மற்றும் யேசுதாஸ் ஆகியோருக்கும் போகும்.
அப்படி அவர்கள் பாடிய சில பாடல்களை நாம் பாடவில்லையே என அவர் வருத்தப்பட்டதும் நடந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.பி.பி ‘உரிமைக்குரல் படத்தில் இடம் பெற்ற ‘விழியே கதை எழுது. கண்ணீரில் எழுதாதே’ பாடலை கேட்கும்போதெல்லாம் ‘இந்த பாடலை நாம் பாட வில்லையே’ என ஃபீல் செய்திருக்கிறேன். அதிகமாக யேசுதாஸ் அண்ணா பாடிய பாடல்கள்தான் அப்படி என்னை நினைக்க வைத்தது’ என எஸ்.பி.பி. சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: sகேப்டனை கடைசியாக சந்தித்த போது இதைக்கேட்டேன்!.. அழுதுவிட்டார்… கண்கலங்கிய மன்சூர் அலிகான்..