Cinema History
ஏ.ஆர்.ரகுமானின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. தோட்டக்காரரிடம் கண்டிஷன் போட்ட இசைப்புயல்!..
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ்த்திரை உலகில் ஒரு முன்னணி இசை அமைப்பாளர். இவரது பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். இளசுகளின் கொண்டாட்டம். இவரது தந்தை பற்றியும், ஏ.ஆர்.ரகுமானின் மனிதாபிமானம் குறித்தும் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி இவ்வாறு தெரிவிக்கிறார்.
ஆர்.கே.சேகர்னா எல்லாருக்கும் தெரியாது. ஏ.ஆர்.ரகுமான்னா எல்லாருக்கும் தெரியும். அவரோட தந்தை தான் ஆர்.கே.சேகர். 52 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மலையாளத்தில் மட்டும் 25 படங்கள் இசை அமைத்துள்ளார். குறிப்பாக இசை நடத்துனராக இருந்துள்ளார்.
ஆர்.கே.சேகர் 25 கலைஞர்களை வரவழைத்து அவர்களுக்கும் சம்பளம் வாங்கிக் கொடுப்பாராம். அப்படிப்பட்ட மனிதாபிமானம் மிக்கவர். இவர் யாரிடமும் கமிஷன் வாங்குவது இல்லையாம்.
இவர் அடிக்கடி சாப்பிடாமல் டீயாகக் குடித்து முடிந்தால் பன் சாப்பிடுவாராம். இப்படி சாப்பிடாமல் பிள்ளைகள்லாம் வளர வேண்டிய வயசில் வயிற்றுப்பிரச்சனை வந்து 43 வயசிலேயே இறந்து போனாராம். அதுக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் செல்வாக்கோட இருக்கிறார். பழசை மறக்காதவர். பலருக்கும் உதவி செய்வார். இதுபற்றி யாரிடமும் தம்பட்டமும் அடிக்கமாட்டார்.
கலைஞர்களிடம் சாப்பிட்டீங்களான்னு கேட்பாராம். சாப்பிட்டால் தான் வேலைக்கேப் போவாராம். அதையும் தாண்டி ஓட்டுநர், உதவியாளர்களையும் கேட்டு அவர்களுக்குப் பிடித்த சாப்பாட்டை தயார் செய்து கொடுப்பாராம். தன்னோட தகப்பனார் மாதிரி வேறு யாருக்கும் நிலைமை வந்துவிடக்கூடாது என்று தான் இப்படி செய்வாராம்.
இதையும் படிங்க… ‘குடி’னா ஆண், பெண் இருவருக்கும் சமம்! ஏதோ சொல்லப் போய் வசமாக சிக்கிய விஜய் ஆண்டனி
தோட்டக்காரரும் அப்படித்தான். இவரைப் பார்த்ததும் கும்பிடுவாராம். இதுதொடரும் போது, ஒருநாள் அவரே இதுபற்றி அவரிடம் கேட்டாராம். நான் உங்க மகன் மாதிரி நான் தான் முதலில் கும்பிடணும் என சொல்லியும் தொடர்ந்து தோட்டக்காரர் முந்திக்கொண்டு முதலில் கும்பிடுவாராம்.
ஒரு கட்டத்தில் 500 ரூபாயை அவரிடம் கொடுத்து இனி இப்படி செய்யாதீர்கள். நீங்கள் என் தந்தை மாதிரி என்றாராம். நீங்க முதல்ல கும்பிட்டால் எனக்கு பாவம் வந்து சேரும் என அன்பால் கடிந்து கொண்டாராம் ஏ.ஆர்.ரகுமான்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.