Cinema History
வெள்ளி விழா கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… இவ்வளவு இருக்கா?
கேப்டன் விஜயகாந்த் நடித்த சில்வர் ஜூப்ளி (வெள்ளி விழா) படங்கள் பற்றிப் பார்ப்போம்.
175 நாள்களைக் கடந்து ஓடிய படங்கள் தான் சில்வர் ஜூப்ளி. அப்படி 12 படங்கள் விஜயகாந்துக்கு ஓடியுள்ளன. 1986ல் வெளியான அம்மன் கோவில் கிழக்காலே. ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம். விஜயகாந்த், ராதா நடித்த படம். இது 200 நாள்களைக் கடந்து ஓடியது.
1984ல் ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான படம் வேங்கையின் மைந்தன். விஜயகாந்த், நளினி நடித்த இந்தப் படமும் 200 நாள்களைக் கடந்து ஓடியது. 1988ல் வெளியான படம் செந்தூரப்பூவே. தேவராஜ் இயக்கினார். விஜயகாந்த், ராம்கி, வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடித்த படம். இது 200 நாள்களைக் கடந்து ஓடிய மெகா ஹிட் படம்.
1984ல் வெளியான படம் நூறாவது நாள். மணிவண்ணன் இயக்கிய படம். விஜயகாந்த், நளினி, மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு த்ரில்லர் படம். 200 நாள்களைக் கடந்து ஓடியது. 1990ல் வெளியான படம் சத்ரியன். கே.சுபாஷ் இயக்கியுள்ளார். விஜயகாந்த், பானுப்பிரியா நடித்த இந்தப் படம் 200 நாள்களைக் கடந்து ஓடியது.
1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்டமான படம். விஜயகாந்த், சரத்குமார் உள்பட பலர் நடித்த படம். சண்டைக்காட்சிகள் அபாரமாக இருக்கும். இது ஒரு சில்வர் ஜூப்ளி படம். 2002ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ரமணா. விஜயகாந்த், சிம்ரன் நடித்த படம். 200 நாள்களைக் கடந்து ஓடியது.
2000ல் வெளியான படம் வானத்தைப் போல. விக்ரமன் இயக்கிய இந்தப் படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது 200 நாள்களைக் கடந்து ஓடியது.
2000ல் மகாராஜன் இயக்கத்தில் வெளியான படம் வல்லரசு. தீபாவளி அன்று வெளியாகி பட்டையைக் கிளப்பியது. விஜயகாந்த் நடிப்பில் செம மாஸ் ஹிட்டைக் கொடுத்து 200 நாள்களைக் கடந்து ஓடியது.
1991ல் வெளியான படம் மாநகர காவல். ஏவிஎம் தயாரிப்பில் தியாகராஜன் இயக்கிய படம். விஜயகாந்த், ஆனந்த்ராஜன், லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். 1992ல் வெளியான படம் சின்னக்கவுண்டர். ஆர்.வி.உதயகுமார் இயக்கினார். விஜயகாந்த், சுகன்யா, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். இது 255 நாள்கள் ஓடி பட்டையைக் கிளப்பியது.
1991ல் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். 200 நாள்களைக் கடந்து ஓடியது.