அவசரப்பட்டு இதுவும் உல்டாவா போச்சே!.. என்ன விட்ருங்கடா ப்ளீஸ்!.. கதறும் வெங்கட் பிரபு..

Published on: March 17, 2024
venkat
---Advertisement---

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்தவுடன் யாரும் எதிர்பார்க்காதபடி மங்காத்தா, மற்றும் மாநாடு பட இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் கை கோர்த்தார் விஜய். ஏனெனில், வெங்கட்பிரபு அஜித்துக்கு நெருக்கமானவராக இருந்தவர். வெங்கட்பிரபு சொன்ன கதை விஜய்க்கு பிடித்துபோக வேலைகள் வேகமாக துவங்கியது. விஜய் இரட்டை வேடம் என சொல்லப்பட்டது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அதோடு, விஜயின் நெருங்கிய தோழி திரிஷா இந்த படத்தில் ஒரு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இதையும் படிங்க: இப்படி நடிச்சேன்! யாரும் கை தட்டலயே!.. லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் ஏமாந்து போன ரஜினி…

அதேநேரம், லியோ படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு கோட் படத்திற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான் முக்கிய காரணம். அதோடு, ஒருபக்கம், விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டதோடு, சினிமாவை விட்டு விலகி முழு அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

எனவே, அவரின் அரசியல் நடவடிக்கைகள் மீதே ரசிகர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதோடு, சமூகவலைத்தளங்களில் துவக்கம் முதலே கோட் படத்தின் மீது நெகட்டிவ் கமெண்ட்டுகள் வெளியானது. அதோடு, கோட் படம் பற்றி எந்த அப்டேட்டையும் வெங்கட்பிரபு சொல்லாதது முரட்டு விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: செலிபிரேட் பண்ண ரெடியாகுங்க மக்கா… கோட் படத்தின் முக்கிய அறிவிப்பு… கலக்குறீங்களே!..

இதன் காரணமாக அவரை அசிங்கமாக திட்டவும் துவங்கிவிட்டனர். எனவே எதையாவது சொல்லி ரசிகர்களை ஆஃப் செய்வோம் என நினைத்த வெங்கட்பிரபு ‘கோட் படத்தின் அப்டேட் விரைவில்.. அது வொர்த்தாக இருக்கும்’ என டிவிட்டரில் பதிவிட்டார். இயக்குனரே வொர்த் என சொன்னதால் இதுவும் நெகட்டிவாக திரும்பிவிட்டது.

twit

எனவே, ரசிகர்கள் இதை வைத்தும் அவரை கலாய்த்து வருகின்றனர். என்னடா இது புள்ளையாரு புடிக்க போய் குரங்கா போயிடுச்சே என அப்செட் ஆகியிருக்கிறாராம் வெங்கட்பிரபு. சீக்கிரம் ஒரு நல்ல அப்டேட்டை கொடுத்து ரசிகர்கள் ஏன் கோபப்படப் போகிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.