மாமனார் – மருமகன் ரெண்டு பேருக்குமே வாயில சனிதான் போல!.. இப்படியா வாய் விட்டு மாட்டிக்குவாங்க!..

Published on: March 23, 2024
Rajni, Dhanush
---Advertisement---

தலைப்பைப் பார்த்ததும் என்னமோ ஏதோன்னு நினைச்சிடாதீங்க. ரஜினியும் ஒரு மேடையில் அப்படி பேசியிருக்கக்கூடாது… தனுஷூம் அப்படி பேசியிருக்கக்கூடாது என இருவருமே ஃபீல் பண்ற அளவு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. என்னன்னு பார்க்கலாமா…

இளையராஜாவின் பயோபிக் விழாவில் கலந்து கொண்டார் உலகநாயகன். அங்கு கமல் அருண்மாதேஸ்வரனை சந்தித்து இது வெறும் இளையராஜா படம் அல்ல. பாரத ரத்னா இளையராஜா. படம் சூப்பராக வரணும்னு டிமாண்ட் வைத்தாராம். டைரக்டர் மிரண்டே போய்விட்டாராம். கமல் போகும்போது தனுஷ், இளையராஜா எல்லாரும் இருந்தாங்களாம்.

கமல் மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது. எவ்வளவு கஷ்டமான ரோலை எல்லாம் அசால்டா நடிச்சிருக்காருன்னு தனுஷ் கமலை ஒரு சமயம் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

Kamal, Ilaiyaraja, Dhanush
Kamal, Ilaiyaraja, Dhanush

கமல்  ஒரு லெஜண்ட். நிறைய பேர் அவரை பாலோ பண்ணித்தான் நடிக்கிறாங்க. கமல் முன்னாடி ரஜினி, இளையராஜா என இருவரையும் தனித்தனியாக பபோபிக் பண்ணனும் ஆசை இருப்பதாக சொன்னாராம். அதில் ஒன்று இப்போது நிறைவேறிவிட்டதாம். ஆனா இதை நான் ஒரு லெஜண்டை (கமலை) வைத்துக் கொண்டு சொல்லியிருக்கக் கூடாது என்றார் தனுஷ்.

இதில் உலகநாயகன் கமலாக சூர்யாவும், ரஜினியாக லாரன்ஸ் அல்லது சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகநாயகன் கமல் துவங்கி வைத்த விழா என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மார்ச் 23 (இன்று) ராஜலெட்சுமி என்ஜினீயரிங் காலேஜ்க்கு சீப் கெஸ்ட்டாகப் போகிறார். என்ன பேசப்போகிறார் என்பதையும் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க… ‘காவாலா’ தமன்னாவுக்கு கண்ட இடத்துல காத்துவாங்குதே!.. கன்ட்ரோல் இல்லாமல் போகும் யங்ஸ்டர்ஸ்!..

மருமகனுக்கும் மாமனாருக்கும் ஒரே பிரச்சனை தான். அதாவது ரஜினிகாந்த் காவேரி மருத்துமனை சம்பந்தமாக ஒரு திறப்பு விழாவில் கலந்து கொண்டாராம். அப்போது முன்னெல்லாம் கமல் வீட்டுப் பக்கத்தில் தான் காவேரி ஆஸ்பத்திரி இருக்கும். ஆனா இப்போ காவேரி ஆஸ்பத்திரி பக்கத்துல தான் கமல் வீடு இருக்குன்னு சொல்லிட்டு ஐயய்யோ வேற ஏதாவது எழுதிடாதீங்கப்பா… இது எலெக்ஷன் டைம் வேறன்னு வாயில் வந்ததை எல்லாம் பேசி விட்டாராம் சூப்பர்ஸ்டார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.