Connect with us
Sivaji, Silk

Cinema News

சிவாஜிக்கு சில்க் கொடுத்த மரியாதை… இதுலாம் ரொம்ப ஓவரா இருக்கே… இப்படி எல்லாமா நடந்தது?

தமிழ்த்திரை உலகின் சிம்ம சொப்பனம், கலைத்தாயின் தவப்புதல்வன், நடிகர் திலகம், செவாலியே என்றெல்லாம் அழைக்கப்படுபவர் சிவாஜிகணேசன். இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.

படிக்காத மேதை, பாகப்பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா, பாசமலர், பழனி என ப வரிசையில் உள்ள படங்களை மட்டும் பார்த்தாலே தெரியும் சிவாஜி எவ்வளவு உயர்ந்த நடிகர் என்று. அவரது படங்களில் அவர் கேரக்டராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். அதனால் தான் அவரது படங்கள் பிற நடிகர்களுக்கு ஒரு டிக்ஷனரியாகவே உள்ளன.

அவரது படத்தில் சிவாஜி இந்தக் காட்சியில் எப்படி நடித்திருப்பார் என பழைய படங்களைப் போட்டுப் பார்ப்பார்களாம். அதே போல தானும் நடித்து பாஸ்மார்க் வாங்கி விடுவார்களாம். அதனால் தான் பெரும்பாலும் நடிகர்களின் நடிப்பு சிவாஜி சாயலிலேயே இருக்கும்.

Sivaji ganesan

Sivaji ganesan

அதனால் சிவாஜிக்கு அனைத்து நடிகர்களுமே மிகுந்த மரியாதையைக் கொடுப்பார்கள். நடிகைகளும் இதில் விதிவிலக்கல்ல. படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி செட்டுக்குள் வந்து விட்டால் போதும். அங்கிருக்கும் அத்தனை நடிகர்களும், நடிகைகளும் எழுந்து நின்று மரியாதைக் கொடுப்பார்களாம்.

ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் உட்கார்ந்து இருப்பாராம். என்னடா ஒரே ஆச்சரியமா இருக்கு? யாருடா அந்த அப்பாடக்கர்னு தானே கேட்குறீங்க. அவர் வேறு யாருமல்ல. 80ஸ் குட்டீஸ்களின் கனவுக்கன்னி கவர்ச்சி தாரகை சில்க் ஸ்மிதா தான்.

இதையும் படிங்க… பாடாய்படுத்தும் நெப்போட்டிசம்!.. தமிழ்த்திரை உலகில் அல்லோகலப்பட்ட நடிகர் நடிகைகள்…

இப்படி உட்கார்ந்து இருப்பதற்கு அவர் சொல்லும் காரணம் தான் ஹைலைட். மரியாதையை வெளியேக் காட்டினால் தான் தெரிய வேண்டும் என்று இல்லை. மனசுக்குள் இருந்தாலே போதும். என் மனசுக்குள் அவருக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்குங்கறது அவருக்கே தெரியும் என்பாராம் அம்மணி.

அது சரி. எத்தனை பேருக்கு இப்படி மனசுக்குள் மரியாதையை ஒளித்து வைத்து இருந்தாரோ தெரியவில்லை. சில்க்கை பொருத்தவரை சினிமாவில் வந்து போகும் வெறும் கவர்ச்சி தாரகை மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் யாராவது வந்து இவரிடம் உதவி என்று கேட்டால் வாரி வழங்கிவிடுவாராம்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top