Connect with us
ilai

Cinema News

வசமா சிக்கிய இளையராஜா! கமலை உள்ள கொண்டு வந்த காரணமே இதுதான்.. பயோபிக்கில் இத்தனை இருக்கா?

Ilaiyaraja Biopic: தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இளையராஜாவின் பயோபிக் திரைப்படம். அந்தப் படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக சொல்லப்படுகிறது. அதற்கான கதை விவாதத்தில் இளையராஜா தற்போது ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பயோபிக்கில் திடீரென திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பை கமல் ஏற்று இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. திடீரென கமல் உள்ள வந்த காரணம் ஏன் எதற்காக என்பதை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆடுஜீவிதம் முதல் விமர்சனம்!.. மணிரத்னமுடன் படம் பார்த்த கமல்ஹாசன்!.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

அதாவது ஒரு பயோபிக் என்றால் அதில் ஒரு வில்லன் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதாவது மொசாடு என்ற ஒரு இசையமைப்பாளரின் பயோபிக் வெளிவந்ததை பற்றி கூறிய அந்தணன் அந்த பயோபிக்கில் மொசாடு மாதிரியே ஒரு பெரிய இசை ஜாம்பவான் அந்த ஊரில் இருந்ததாகவும் அவருக்கும் இவருக்கும் ஆன அந்த போட்டி பொறாமை எந்த வகையில் அமைந்தது எனவும் அந்த பயோபிக்கில் தெள்ளத் தெளிவாக கூறப்பட்டிருக்கும்.

அதே மாதிரியான ஒரு கதை இளையராஜாவின் பயோபிக்கில் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். ஏனெனில் இளையராஜா ஒரு நெகட்டிவ்வான கருத்தை தன் படத்தில் வைக்கவே மாட்டார். அப்படி வைத்தால் தான் அது சுவாரஸ்யமான படமாக மாறும். அது மட்டுமல்லாமல் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் இளையராஜாவை ஆதிக்கம் செலுத்தும் இயக்குனராக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆக்சன் ரூட்டுக்கு மாறி மொக்கையான பரத்!.. வாய்ப்புக்காக வில்லனாக மாறிய சோகம்….

அது எந்த இயக்குனராலும் முடியவே முடியாது. அருண் மாதேஸ்வரனை இளையராஜா தன்னுடன் 10 நாட்கள் வைத்திருந்து அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு அதன் பிறகு அனுப்பி இருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார் என தெரிந்ததுமே இளையராஜா நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் எடுக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

அப்படி இருக்கையில் இளையராஜா என்ன சொல்கிறாரோ அதைத்தான் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தில் காட்டுவார் என அந்தணன் கூறினார். இப்படி இருக்கும் பட்சத்தில் அந்த படத்தில் சுவாரஸ்யம் என்பது எப்படி வரும். அதையும் தாண்டி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அந்த படத்தில் இடம்பெற வேண்டுமானால் கமல் போன்ற ஒரு பெரிய ஆளுமை இந்த படத்திற்குள் நுழைய வேண்டும். அதன் காரணமாகத்தான் இந்த பயோபிக்கில் கதை திரைக்கதை வசனத்தை கமல் எழுத இருக்கிறார் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

இதையும் படிங்க: கமலின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் அசோக்செல்வன்! அதுக்குத்தான் இந்த கெட்டப்பா?

google news
Continue Reading

More in Cinema News

To Top