கமலின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் அசோக்செல்வன்! அதுக்குத்தான் இந்த கெட்டப்பா?

Actor Ashok Selvan: கோலிவுட்டில் இளம் நடிகர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் சமீப காலமாக ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அசோக் செல்வன்.

எதார்த்தமான நடிப்பால் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னுள் வைத்திருக்கும் அசோக் செல்வன் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் மக்களை வெகுவாக சென்றடைந்து விடுகிறது. அவர் நடித்த அனைத்து படங்களும் நல்ல ஒரு பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இதையும் படிங்க: கமல் அண்ணன் பொண்ணிடம் ஜொல்லு விட்ட ரஜினிகாந்த்… நாங்க சொல்லலை… அந்த நடிகையே சொல்லிட்டாங்கப்பா!

சமீபத்தில் கூட அவர் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மாஸ் ஹீரோவாக இல்லாவிட்டாலும் அவருக்கு என ஒரு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் அசோக் செல்வன். இந்த நிலையில் கமல் நடித்த ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் அசோக் செல்வன் நடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றது.

கமல், அமலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் சத்யா. அந்த படத்தில் ஒரு ரவுடியாக நடித்து அசத்தி இருப்பார் கமல். இந்தப் படத்தின் ரீமேக்கில் தான் இப்போது அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காகத்தான் தாடி எல்லாம் வளர்த்து ஒரு ஸ்டைலிஷ் ஆன கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அசோக் செல்வன்.

இதையும் படிங்க: குடும்பமே பட்டினி!.. தயங்கி தயங்கி உதவி கேட்கப்போன நாடக நடிகர்… எம்.ஜி.ஆர் செய்ததுதான் ஹைலைட்!…

அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு கருத்து கண்டிப்பாக சொல்லப்பட்டிருக்கும். தெகிடி படத்தில் ஒரு சிபிஐயாக நடித்து அந்தப் படத்தில் இருந்தே அசோக் செல்வன் மீது கோடம்பாக்கத்தில் ஒரு தனி மரியாதையே எழுந்தது. அதன் விளைவுதான் இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார் அசோக் செல்வன்.

சமீபத்தில்தான் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்தார் அசோக் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோட் படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா?!.. ஆனாலும் லியோவை விட கம்மிதான்!..

 

Related Articles

Next Story