Connect with us
MGR

Cinema History

குடும்பமே பட்டினி!.. தயங்கி தயங்கி உதவி கேட்கப்போன நாடக நடிகர்… எம்.ஜி.ஆர் செய்ததுதான் ஹைலைட்!…

பழைய நாடக நடிகர் ஒருவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பார்க்க ஒருமுறை  ராமாவரம் தோட்டத்துக்கு சென்றாராம். அவரிடம் ‘என்ன விஷயமாக அங்கு வந்துள்ளீர்கள்?’ என்று விசாரித்ததில் தயங்கி தயங்கி குடும்பமே பட்டினி. ஒன்றுமே முடியவில்லை… என சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் சங்கடப்பட்டாராம்.

சின்னவரோட (எம்ஜிஆர்) நாடகத்துல நடிச்சிருக்கேன். ஏதாவது உதவி கேட்கலாம் என வந்திருப்பதாகவும் ஒருவழியாக சொல்லி முடிந்தார் அந்த நாடக நடிகர். அப்புறம் அங்கிருந்த ஒரு ஊழியர் ‘சரி. இங்கேயே உட்காருங்க. எம்ஜிஆர் வெளியே வந்ததும் கேளுங்க. செய்வார்’ என்று சொன்னார்.

சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் வெளியே வந்தார். தூரத்தில் இருந்த நாடக நடிகரைப் பார்த்தார். எப்படி வந்தேன்னு சைகையால் கேட்டார். அப்புறம் இருந்து சாப்பிட்டு விட்டுத் தான் போகணும் என்றவர் காரில் ஏறிச் சென்று விட்டார். அந்த நடிகரோ ஒன்றுமேபுரியாமல் தவித்தபடி நின்றார்.

இதையும் படிங்க… ரஜினியை வைத்து 20/20 ஆடிய இயக்குனர்… கப் அடிச்சு கொடுத்த பிகிலும் இவருதானாம்!….

அப்போது அந்த ஊழியர் இருந்து சாப்பிட்டு விட்டுப் போகச் சொன்னாருல்ல. மதியம் சாப்பிட்டு விட்டுப் போங்க என்றார். அதற்கு நாடக நடிகரோ ‘நான் எப்படி சாப்பிடுவது?.. என் குடும்பமே பட்டினியா கிடக்குதே’ என்றாராம்.

மதியம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது எம்ஜிஆர் வந்துவிட்டார். உடனே அந்த ஊழியர் எம்ஜிஆர் வெளியே போகும்போது பார்த்துட்டுப் போங்க என்றாராம். எம்ஜிஆரைப் பார்த்ததும்,  ‘சாப்பிட்டாயா?’ என கேட்டுவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார். கண்கலங்கியபடி அவரையே பார்த்து நின்றாராம் நாடக நடிகர்.

உடனே பக்கத்தில் அழைத்த எம்ஜிஆர் அவரது சட்டைப்பையில் ஒரு கவரை வைத்தாராம். கார் கிளம்பியது. கவரைப் பிரித்துப் பார்த்த அந்த நாடக நடிகருக்கோ கண்களில் கண்ணீர் வழிந்தது. கவரில் 10 ஆயிரம் ரூபாய் இருந்ததாம். மறுநாள் தோட்டத்திற்கு வந்ததும் ஊழியர் கேட்டாராம்.

MGR5

MGR

நீங்க நேற்று அந்த நாடக நடிகருக்கு மதிய உணவு கொடுத்து சாப்பிடச் சொன்னீங்க. அப்புறம் காரில் புறப்படும்போது அவரது சட்டைப்பையில் 10 ஆயிரம் ரூபாயுடன் கவரை வைத்தீர்கள். என்ன காரணம்னே எனக்குத் தெரியல என்று கேட்டாராம். அதற்கு எம்ஜிஆர் எப்பவும் கஷ்டத்தோட வர்றவங்கள அவங்க வாயால பணத்தைக் கேட்க வைக்கக்கூடாது.

அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் பணம்னு கேட்க சங்கடப்படுவார். அவரா கேட்டா இதை விட குறையாகத் தான் கேட்டுருப்பார். அதனால் தான் நானே அந்தத் தொகையை வைத்துக்கொடுத்தேன் என்றாராம். அதனால் தான் நாம் இப்ப வரைக்கும் எம்ஜிஆரை நினைத்துக் கொண்டே இருக்கிறோம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top