Connect with us
rajini

Cinema News

ரஜினியை வைத்து 20/20 ஆடிய இயக்குனர்… கப் அடிச்சு கொடுத்த பிகிலும் இவருதானாம்!….

பேருந்து நடத்துனராக வாழ்க்கையை துவங்கிய சிவாஜி ராவ் கெய்க்வாட் திரைப்பட கல்லூரியில் அவரது நன்பரின் உந்துதலால் சேர்ந்து இயக்குனர் பாலசந்தரால் “அபூர்வ ராகங்கள்” படத்தில் நடிக்க துவங்கி சினிமாவில் களம் கண்டார்.

தனது புது விதமான அணுகுமுறையான “ஸ்டைல்” என்ற ஆயுதத்தின் மூலம் ரசிகர்களை கவரத்துவங்கிய இவர், ரஜினிகாந்தாக பெயர் மாற்றப்பட்டு வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது நூற்றி எழுபதாவது படமான “வேட்டையன்” படத்தில் நடித்தும் வருகிறார். இவர் நடித்து வெளியான “ஜெயிலர்” படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதையும் படிங்க: வீட்ல இப்பவும் சிவாஜிராவ் தான்!.. ரகசியமா பண்ண வேலையை அம்பலப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!..

வில்லனாக, எதிர்மறை கதாபத்திரங்களில் நடித்து வந்த இவர் “பைரவி” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற தொடர்ந்து ஹீரோவாகவே வலம் வர துவங்கினார். “முள்ளும் மலரும்” படம் இவரது வாழ்வில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து. இவருக்கே உரிய பாணியில் நடிக்க ரசிகர்கள் இவரை கொண்டாடத்துவங்கினர். “எந்திரன்” படத்தில் ஹீரோ, வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பில் மிரட்டியுமிருந்தார்.

rajini

இவருடைய வெற்றி பயணத்தில் மிகமிக முக்கிய பங்கு வகித்த இயக்குனர்களில் முக்கிய இடத்தை பிடித்தவர் எஸ்.பி.முத்துராமன். “நான் மகான் அல்ல”. “கழுகு”, “நல்லவனுக்கு நல்லவன்”, “போக்கிரி ராஜா” உள்ளிட்ட படங்கள் இவர்கள் இருவரையும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. தொன்னூறுகளில் வெளியான “பாண்டியன்” படமே இவர்கள் இருவரும் இணைந்த கடைசி படமானது.

இதையும் படிங்க: தம்பி கண்டிப்பா ஜெயிக்கணும்!.. விஜயின் அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி!.. இது செம டிவிஸ்ட்!..

இதுவரை ரஜினியை மட்டும் வைத்து இருபத்தி மூன்று படங்களை இயக்கியுள்ள முத்துராமன், ரஜினியை வெவ்வேறு பரிமாணத்தில் காட்டிய பெருமைக்கும் சொந்தக்காரராக மாறினார். இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் தாறுமாராக ஓடத்துவங்கியதே இவர்கள் இருவரும் மீண்டும், மீண்டும் இணைய காரணமாக அமைந்தது.

ரஜினி தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் படங்களில் நடித்ததை விட முத்துராமனின் படங்களிலேயே அதிகமாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாது ரஜினி தனது வாழ்வில் அதிக படங்களை நடித்து கொடுத்த இயக்குனர் என்ற பெருமைக்குரியவர் இன்றுவரை எஸ்.பி. முத்துராமன் மட்டுமே.

இதையும் படிங்க: இன்னும் 10 நாட்கள் விட்டிருந்தால் உயிரே போயிருக்கும்!.. ரஜினிக்கு கெடு விதித்த டாக்டர்கள்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top