விரட்டி விட்ட விஜய்!.. சூர்யாவை நம்பி சூப்பாக போகும் கார்த்திக் சுப்புராஜ்!.. இதாவது ஆரம்பிக்குமா?..

Published on: March 28, 2024
---Advertisement---

பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை பிடிக்கவில்லை என ரஜினிகாந்த் நிராகரித்து விட்டார். தளபதி 69 படத்தை எப்படியாவது செய்து விடலாம் என நம்பி லியோ படத்தின் பூஜைக்கு எல்லாம் சென்ற கார்த்திக்  சுப்புராஜ் சொன்ன கதையை நடிகர் விஜய் ரிஜெக்ட் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதே போலத்தான் விஜய் வேண்டாம் என சிறுத்தை சிவாவை அனுப்பியதும் கங்குவா படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடித்த சூர்யா இந்த முறை கார்த்திக் சுப்புராஜை தனது 44வது படத்திற்கு லாக் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் கலக்கிய ஆர்.வி.உதயகுமார்!.. மறக்க முடியாத சின்னக்கவுண்டர்!..

ஏற்கனவே தமிழில் அறிவிக்கப்பட்ட சூர்யா படங்களான வாடிவாசல், புறநானூறு படங்கள் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை செம ஹேப்பியாக கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் என்று சொல்வதை விட வான்டட்டா வந்து சிக்கிட்டாரே என்றும் இந்த படம் ஆரம்பிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகப் போகிறதோ தெரியவில்லையே என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோட் பதிலாக தளபதி69ஐ கடைசி படமாக மாற்ற இதான் காரணம்… நெத்தியடியாக சொன்ன பிரபலம்…

சியான் விக்ரமை வைத்து மஹான் படத்தை எடுத்து ஓடிடியில் வெளியிட்டதை போல ஓடிடி ரிலீஸா? என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால், கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தாறுமாறாக இருந்தது.

அண்ணாத்த சொதப்பலுக்குப் பிறகு சிறுத்தை சிவா கங்குவா படத்தில் சம்பவம் செய்ய உள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜும் சூர்யாவுக்கு தரமான படத்தைக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர்.  நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்தால் அப்போ அந்த இந்தி படமான கர்ணன் டிரப்பா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.