Connect with us
vijayakanth

Cinema History

நடிக்க மறுத்த விஜயகாந்த்!. பிரபு, சத்தியராஜ் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள்!..

பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை மனதில் வைத்துக்கு கொண்டு கதைக்களம் அமைக்கப்படும். அவர்களின் ஸ்டைலுக்கு ஏற்றமாதிரியும் திரைக்கதையும் தயார் செய்யப்படும். இப்படி முடிவு செய்யப்பட்ட பின்னரும் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த ஹீரோவிற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வந்த படங்களும் ஏராளம்.

1993ம் ஆண்டு “செய்யாறு” ரவி, ‘புரட்சி கலைஞர்’ கேப்டன்’ விஜயகாந்திற்காக கதை ஒன்றை எழுதி வைத்துள்ளார். படத்தில் நடிக்க விஜயகாந்தும் ஒப்புக்கொள்கிறார். இப்படி இருக்கையில் அந்த படத்தை துவங்கிய போது விஜயகாந்தால் நடிக்க முடியவில்லை. விஜயகாந்த் அப்பொழுது ரொம்ப பிஸியாக இருந்ததே அதற்கு காரணாமாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: சத்தியராஜ் நடித்து வெளிவராத திரைப்படங்களின் லிஸ்ட்!.. அட இவ்வளவு படமா?!…

“தர்மசீலன்” என்கின்ற அந்த படம் இறுதியாக ‘இளைய திலகம்’ பிரபு நடிப்பில் திரைக்கு வந்தது. பிரபு, குஷ்பூ. மனோரமா, செந்தில் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான படம். விஜயகாந்திடம் கதை சொல்லப்பட்டு அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டும் பிறகு நாயகன் மாற்றமும் ஏற்பட்டது.

இது போலவேதான் இயக்குனர், நடிகர் மணிவண்ணன் கேப்டன் விஜயகாந்த்தை வைத்து ஒரு படத்தை எழுதி இயக்க கதை தயாரானார். அந்த கதையை அவரிடம் போய் சொல்லியும் இருக்கிறார். விஜயகாந்தும் நடிக்க சம்மதிக்க பட வேலைகள் ஜரூராக துவங்கவிருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஆனது.

இதையும் படிங்க: நடிகர்களோட கடைசி படங்கள் பற்றி பார்ப்போமா?!.. மறக்க முடியாத சிவாஜி – விஜயகாந்த்

பின்னர் அந்த படத்தில் நடிக்க சத்யராஜ் அழைக்கப்படுகிறார், ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் வெளிவந்த அந்த படம் மெகா ஹிட் ஆனது. சிவாஜி கணேசன் இந்த படத்தில் சத்யராஜுடன் இணைய, ராதா உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள். கைதியாக வரும் கதாநாயகன் சத்யராஜ் தன் மீது சுமத்தப்பட்ட வீண் பழியை அகற்ற என்ன செய்கிறார்? இதற்கு சிவாஜி எப்படி உதவுகிறார்? இதுவே கதைக்களம்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் ‘ஏ ராஜா ஒன்றானோம் இன்று’, இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆக, படமும் மிகப்பெரிய வெற்றியானது. இதன் பிறகே மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணி பல படங்களில் ஒன்றாக பணியாற்ற துவங்கினார்கள். சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களில் மணிவண்ணனும் இணைந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top