அஜித்தின் கால்ஷீட்டை வீணாக்கிய லைக்கா.. இத மட்டும் செய்யலைனா ‘விடாமுயற்சி’ அவ்ளோதான்

Vidamuyarchi: அஜித்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் விடாமுயற்சி. துணிவு பட வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த எதிர்பார்ப்புதான் விடாமுயற்சி படத்தின் மீது திரும்பியது. ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சினைகள்.

முதலில் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஸ்கிரிப்ட்டில் விக்னேஷ் சிவன் செய்த சொதப்பல்கள் லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை வேண்டாம் என ஒதுக்கியது. ஆனால் இந்த பிரச்சினையில் அஜித் தலையிடவே இல்லை. ஒரு படத்தின் ப்ராஜக்ட் என்பது நிச்சயமாக ஹீரோக்களை நம்பி இருப்பதால் இதில் அஜித் தலையிடாமல் இருந்ததற்கு ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க: கமலுடன் மோதிய அஜித் படங்கள்!.. ஜெயிச்சது தலயா?.. உலக நாயகனா?.. வாங்க பார்ப்போம்!.

ஆனால் அஜித்தை பொறுத்தவரைக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டால் நடிப்பது மட்டுமே தன் வேலை என்று நினைப்பவர். அதிலிருந்து என்றைக்கும் அவர் மாறியதே இல்லை. அந்த ஒரு நிலைப்பாட்டுடன்தான் அஜித் இதுவரை இருந்துவருகிறார். விக்னேஷ் சிவன் விலகியதற்கு பிறகு மகிழ்திருமேனி இந்தப் படத்திற்குள் வந்தார். படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. முழு மூச்சுடன் அஜித் இதில் கவனம் செலுத்தினார்.

ஆனால் லைக்காவிற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான தனன்செயன் இதுபற்றி கூறிய போது ‘அஜித் தொடர்ந்து இந்தப் படத்திற்காக தன்னுடைய கால்ஷீட்டை ஒதுக்கினார். அவரை பொறுத்தவரைக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க வேண்டும் என நினைப்பார். அதே மாதிரிதான் துணிவு படத்திற்கும் தொடர்ந்து தனது கால்ஷீட்டை கொடுத்து விறுவிறுப்பாக படத்தை முடிக்க வைத்தார்.’

இதையும் படிங்க: 22 வருடங்களுக்குப் பிறகு வரும் அழகி… படத்தோட வெற்றிக்கு பார்த்திபன் சொல்ற காரணத்த பாருங்க!..

ஆனால் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்கள். மே மாதத்திற்குள் எப்படியாவது படத்தை முடிக்க வேண்டும் என்றுதான் அஜித்தும் இருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. இதில் அவரை குற்றம் சொல்ல முடியாது. அதனால் இந்த இரண்டு மாதத்திற்குள் எப்படியாவது விடாமுயற்சி படத்தை முடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் விடாமுயற்சி படத்திற்கு முன்பாக குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸாகி விடும் என தனஞ்செயன் கூறினார்.