Connect with us
Kamal lingusamy karthi

Cinema News

லிங்குசாமியை காலி செய்த கமல்!.. கை கொடுப்பாரா கார்த்தி?!.. ஐயோ பாவம் அவரு நிலமை!..

பையா படத்தின் இயக்குனர் லிங்குசாமி. தற்போது இவர் திரையுலகத்தில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். 2010ல் கார்த்தி, தமன்னா நடிப்பில் பையா என்ற படம் சூப்பர்ஹிட்டாக ஓடியது. இந்தப் படத்தை இயக்கியவர் லிங்குசாமி. படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிறது. லிங்குசாமி இன்னும் எழுந்திருக்கவே முடியவில்லை. இதுகுறித்து பிரபல யூடியூபர் வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

கௌதம் மேனன் ஒரு முறை சொன்னாராம். ஒருவருக்கு கஷ்டம்னா கூட என்ன பிரச்சனை என்று உடன் பழகியவர்கள் கேட்கமாட்டார்களாம். அப்படித்தான் இன்றைய சினிமா உலகம் இருக்கிறது என்கிறார். லிங்குசாமி யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் கேட்பாராம். இன்னைக்கு திரையுலகம் லிங்குசாமியை கைவிட்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

லிங்குசாமி தலைகுப்புற விழுந்ததே கமல் படத்தால் தான். அந்தப் படத்தை சரியான முறையில் கொண்டு போயிருந்தால் அந்தப் படம் ஓரளவு ஓடியிருக்கும். லிங்குசாமியையும் காப்பாற்றி இருக்கும்.

Paiya

Paiya

லிங்குசாமி யாராவது கவலையாக இருந்தால் வாங்கன்னு ஒரு பார்ட்டிக்கு ரெடி பண்ணி அவர்களை ஆறுதல் படுத்துவாராம். இயக்குனர் ஷங்கருக்கும் கூட கவலையைப் போக்க ஒரு கப்பலையே ஏற்பாடு பண்ணி ஷங்கர் குடும்பத்தை அழைத்துச் சென்று பெரிய அளவில் செலவு செய்தாராம்.

ஒருமுறை பார்ட்டியின் போது போதையில் கமலிடம் லிங்குசாமி உங்களை வைத்து படம் பண்ணனும்னு கேட்டாராம். அதற்கு கமலும் சரி என்றதால் அவரது தோளில் கைபோட்டாராம். அது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால் உடனடியாக இந்தப் படத்தைத் துவங்கி லிங்குசாமியை காலி பண்ணியதாகவும் சொல்கிறார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இன்று அவரை கைதூக்கி விடும் இடத்தில் கமலும், கார்த்தியும் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் நினைத்தால் லிங்குசாமிக்கு உதவலாமே என்கிறார் வலைபேச்சு அந்தனன்.

2015ல் கமல் நடிக்க உத்தமவில்லன் என்ற படத்தை லிங்குசாமி இயக்கினார். படம் படு பிளாப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top