Connect with us
vijayakanth

Cinema History

விஜயகாந்தின் பலம் – பலவீனம் என்ன?!. அட இதுக்கு கேப்டனே சொன்ன பதிலை பாருங்க!..

திரையுலகில் விஜயகாந்த் எப்படி வலம் வந்தார் என எல்லோருக்கும் தெரியும். ரசிகர்களுக்கு பக்கா ஆக்‌ஷன் விருந்தை தனது படங்களில் கொடுத்தார் எனில் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எந்த சிக்கலையும், தொல்லையும், பிரச்சனையும், தலைவலியையும் கொடுக்காத ஒரே நடிகராக இருந்தார்.

கதை கேட்பது வரைதான் இயக்குனரை தேர்ந்தெடுக்கும் வேலை. இவர்தான் இயக்குனர் என முடிவெடுத்துவிட்டால் படப்பிடிப்பில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு அப்படியே நடித்து கொடுப்பார். படப்பிடிப்பு தளங்களில் கதையை மாற்று, காட்சியை மாற்று, இந்த வசனத்தை மாற்று, இந்த நடிகை மாற்று என ஒரு போதும் சொல்ல மாட்டார் விஜயகாந்த்.

இதையும் படிங்க: ஏர்போர்ட்டில் சந்தித்த அவமானம்!.. அப்போது கேப்டன் விஜயகாந்த் எடுத்த அந்த முடிவு!..

அதனால்தான் விஜயகாந்தை வைத்து படமெடுக்க வேண்டும் என்கிற ஆசை பல இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இருந்தது. தனது திரைவாழ்வில் பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். பல புதிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

Vijayakanth

Vijayakanth

எதற்கும் கலங்காதவர் விஜயகாந்த். எந்த பிரச்சனை என்றாலும் களத்தில் இறங்கி தீர்வு காண்பார். ஆனால், நம்பிக்கை துரோகம் செய்பவர்களை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. மிகவும் வருத்தப்படுவார். அப்படி அவரை பலரும் ஏமாற்றி இருக்கிறார்கள். ஒருமுறை உங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன? என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: 36 முறை மோதிய விஜயகாந்த் – சத்யராஜ் படங்கள் : ஜெயித்தது புரட்சிக்கலைஞரா? புரட்சித்தமிழனா?..

அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த் ‘ஒருவரை முழுமையாக நம்பிவிடுவேன். அப்படி நம்பிய ஒருவர் எனக்கு துரோகம் செய்தால் மிகவும் வருத்தப்படுவேன். இதுதான் என் பலவீனம். அதேநேரம், அதை மறந்துவிட்டு நமது வேலை பார்ப்போம் என அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிடுவேன். இது என் பலம்’ என விஜயகாந்த் கூறியிருந்தார்.

பல வருடங்களாக தனக்கு தெரிந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்கி அழகு பார்த்தார் விஜயகாந்த். ஆனால், அதில் சிலர் கட்சியிலிருந்து விலகி வேறுகட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். இதுதான் விஜயகாந்தின் மனதை பெரிதும் பாதித்து அவரின் உடல்நிலையே பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top