Connect with us
kamal

Cinema News

‘அயன்’ கமலேஷை ஞாபகம் இருக்கா? முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த சூப்பர் ஹீரோ

Ayan movie: சூர்யாவின் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அயன். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் சூர்யாவின் கெரியரில் ஒரு சூப்பர் திரைப்படமாக மாறியது.

ஒரு பாடலில் சூர்யா தான் நடித்த படங்களின் கதாபாத்திரத்திர தோற்றத்தில் ஒன்றொன்றாக வருவார். அந்த சமயத்தில் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அயன் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

இதையும் படிங்க: தாய் இறந்த நிலையிலும் படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி!.. சோகத்திலும் நடிக்கவந்த நடிகர் திலகம்!..

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் பிரபு, நடிகை ரேணுகா, லாரன்ஸ், பொன்வண்ணன் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். படமும் வெளியாகி ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது.

எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் அயன் படத்தில் மாஸ் காட்டியது கமலேஷ் என்ற வில்லன் கதாபாத்திரம்தான். சென்னையில் வாழும் ராஜஸ்தான் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகரான ஆகாஷ்தீப் சைகல். இவர்தான் கமலேஷ் என்ற கேரக்டரில் நடித்த நடிகர். சட்டவிரோதமாக போதை பொருளை கடத்தும் ஒரு கும்பலின் தலைவனாக நடித்திருப்பார்.

இதையும் படிங்க: அந்த ஒரு காட்சியில் நடிச்சது தப்பா? என்னது 9 நிமிஷமா.. ‘அனிமல்’ படம் பற்றி வாய்திறந்த ராஷ்மிகா

இவருக்கு டப்பிங் பேசியவர் கோலங்கள் சீரியல் நாயகனான அஜய். மிகவும் ஸ்டைலாக ஆங்கிலம் பேசுவதில் வல்லவர் அஜய். ஹேண்ட்ஸம்மான சின்னத்திரை ஹீரோவும் கூட. ஆனால் இதில் திருப்பம் என்னவென்றால் இந்த கமலேஷ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவரே இந்த அஜய்தானாம். கே.வி. ஆனந்தின் அப்பா முதலில் அஜயைத்தான் அந்த கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தாராம்.

ajay

ajay

அப்போது அஜய் கோலங்கள் மற்றும் இதர சீரியல்களில் பிஸியான ஹீரோவாக இருந்ததனால் நடிக்க முடியாமல் போனதாம். இருந்தாலும் கே.வி. ஆனந்த் அஜய் டப்பிங் பேசி முடித்ததும் அவரை கட்டி அணைத்து இந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டமே கொடுத்து விட்டாய் என பாராட்டினாராம். அந்தளவுக்கு அவருடைய குரல் மிகவும் பிரமிப்பாக இருக்கும். கிட்டத்தட்ட அயன் திரைப்படம் 75 கோடி வரை வசூல் செய்தது.

இதையும் படிங்க: விக்ரமை தவிர்த்து அஜித்துக்கு குரல் கொடுத்த மற்றொரு பிரபல நடிகர்! அட அது அவர் வாய்ஸா?

Continue Reading

More in Cinema News

To Top