Connect with us
sivaajee

Cinema History

தாய் இறந்த நிலையிலும் படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி!.. சோகத்திலும் நடிக்கவந்த நடிகர் திலகம்!..

“நடிகர் திலகம்” என்கின்ற அடைமொழிக்கு சொந்தக்காரராக இன்றும் இருப்பவர் “சிவாஜி”கணேசன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை அனாயசமாக செய்து முடித்து அசத்தி காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தவர் இவர். நடிப்பிற்கு உதாரணமாக இவரை மனதில் நினைத்துக்கொண்டு நடித்து வரும் கலைஞர்கள் இன்றும் உண்டு.

காட்சிகளில் நடிக்கும் பொழுது தான் அணிந்திருக்கும் உடைகளை இறுதிவரை சிறிதளவும் கசங்காமல் பார்த்து கொள்பவராம். நடிப்பின் மீது அதிக கவனமும், அர்ப்பணிப்பும் இவரது வெற்றிக்கான காரணங்களாக சொல்லப்படுகிறது. “பாபு” என்கின்ற படத்தில் ‘ரிக்சா’ வண்டியை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இழுத்து வரவேண்டிய காட்சிக்கு ‘டூப்’ போடாமல் இவரே நடித்தார். காட்சி முடிந்ததும் தனது மார்பை பிடித்துக்கொண்டு கீழே சரிய படக்குழு அதிர்ச்சியில் உறைந்ததாம்.

பழக்கமில்லாத வேலையை செய்ததால் தான் இப்படி ஆகிவிட்டது என சாதாரணமாக சொல்லிவிட்டு, அடுத்த காட்சி குறித்து கேட்டாராம். இதனை போல ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க அங்கு கரண்ட் கட் ஆனது. புழுக்கம் தாளாமல் அனைவரும் அறையை விட்டு வெளியேற, சிவாஜி மட்டும் உள்ளேயே இருந்தாராம்.

sivaaji1

sivaaji1

மின் இணைப்பு வருவதற்குள் சாப்பிட்டு விடலாமே என் இயக்குனர் கேட்க, ஒரு மணி ஆகட்டும் எனச்சொல்லிவிட்டு, அந்த நேரத்திலேயே சாப்பிட்டாராம். படப்பிடிப்பு காலை ஆறு மணிக்கு என்றால் அதற்கு முன்பே வந்து நின்று சக நடிகர்களை அதிர்ச்சியில் உறையச்செய்வாராம்.

வசந்தமாளிகை பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணியம்மாள் இறந்து விடுகிறார். பதினாறு நாள் காரியம் முடிவதற்குள் படப்பிடிப்பிற்கு வந்து விட்டாராம் சிவாஜி. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த படக்குழு ‘ஏன் இப்படி செய்தீர்கள்?’ எனக்கேட்க வீட்டில் இருந்தால் தனது தாயாரின் நினைவுகளே வருகிறது, அதனால் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்ததாக சோகமாக சொன்னாராம்.

அப்படி அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட பாடல் தான் “வசந்த மாளிகை” படத்தில் வரும் ‘மயக்கம் என்ன.. மௌனம் என்ன’ என்கின்ற அந்த சூப்பர் ஹிட் பாடல். அளவுகடந்த சோகத்தை தன்னுள் வைத்துக்கொண்டும், தான் செய்ய வேண்டிய வேலையயையும் சரியாக செய்துவந்தவர் “சிவாஜி” கணேசன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top