Connect with us
goundamani

Cinema History

நிஜ வாழ்விலும் அவர் அப்படிப்பட்டவர்தான்!.. கவுண்டமணி ரகசியத்தை சொல்லும் கோவை சரளா!..

யாரு அடிச்சா பூமி சுத்தி கண்னுலன்னு விஜய் “போக்கிரி” படத்துல ஒரு டயலாக் பேசியிருப்பாரு,  அத மாதிரி யாரு வந்த உடனே அடிவயிற்றிலிருந்து சிரிப்பு வந்து தியேட்டர் ஸ்க்ரீன் அதிருமோ அவர் தான் கவுண்டமணி.

நக்கல், நையாண்டி கலந்த காமெடிதான் இவரது ஸ்டைல்.  ரஜினி, கமல், அஜீத், விஜய்ன்னு கூட , பார்க்காமல்  அவர்களை கலாய்த்து தள்ளியிருப்பாரு மனுஷன்.  இவரால மட்டும் தான் அப்படி செய்ய முடிஞ்சது.  அந்த நடிகர்களோட ரசிகர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். “பாபா” திரைப்படம் ரஜினியின் சினிமா வாழ்வில் முக்கியமான ஒரு நேரத்தில் வந்தது. ரஜினியுடன் நடித்த இவர் சூப்பர் ஸ்டார பயங்கராம காலாய்த்து தள்ளியிருப்பார்.

அதே மாதிரி தான் கமல்ஹாசனை “சிங்காரவேலன்”  படத்திலும் வச்சி செஞ்சார்.  அந்த படத்துல ஒரு காட்சியில கூட இவர் தொடர்ச்சியா கவுண்டர் அடிச்சிக்கிட்டு இருக்குற மாதிரி சீன்ல கமல் “யோவ் கொஞ்சம் சும்மா இருயான்னு சொல்ற” மாதிரி வசனம் வரும்.  அந்த அளவு கவுண்டமனி பின்னியெடுத்திருப்பாரு.

சினிமால மட்டும் தான் இப்படின்னு  கிடையாது, மனுஷன் நிஜவாழ்க்கையிலும் அப்படிப்பட்டவர் தானாம் அவர்.  ஒரு முறை சத்யராஜ் கூட ஒரு இயக்குனர் கிட்ட கதை கேட்டுக்கொண்டிருக்கும் போது ‘ இந்த படம் மட்டும் நல்லா வந்திருச்சின்னா  இவர் பாரதிராஜாவை தாண்டிருவாரு’ன்னு கூட இருந்தவர் மலையாளம் கலந்த தமிழ்ல சொல்ல, அதற்கு கவுண்டமணி ‘எப்படி குனிய வைச்சி தாண்டுவாரா?’ன்னு கேட்க அங்கிருந்தவர்கள் எல்லோரும் சிரித்துவிட்டார்களாம்.

sathyaraj koundamani

sathyaraj koundamani

இது போல சினிமா பிரபலம் ஒருவர் உடை அணிந்து வரும் விதத்தை பார்த்து யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு கவுண்டரை சொல்ல அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தார்களாம்.  அவருடன் படப்பிடிப்பு நடந்தால் நாட்கள் போவதே தெரியாது என  சத்யராஜ் அவரது பேட்டி ஒன்றில் சொல்லியிருப்பார்.

ஆண்கள் மட்டுமல்ல தன்னுடன் நடிக்கும் நடிகைகளை கூட விட்டு வைக்க மாட்டாராம். “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் தான் கவுண்டமணியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருப்பார் “கோவை” சரளா.  படப்பிடிப்பிற்கு வந்த அவரிடம் உன் பேரு என்னன்னு கேட்க இவரும் சொல்ல, அது என்ன “கோவையை “சேத்துக்கிட்ட பெயரோடன்னு தனது பாணியில் கேட்டாராம்.

அதற்கு சரளாவும் பதில் நக்கலாகவே சொல்ல இருவரும் நெருங்கி பேச துவங்கினராம். தன் மீது அக்கறை கொண்டவர் கவுண்டமணி. அதனால் தன்னை உடன் பிறந்த சகோதரி போல மதித்து வந்ததாகவும் கோவை சரளா சொல்லியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top