Connect with us

Cinema News

அந்த பயம் வந்துடுச்சு போல!.. வேட்டையன் படத்தோட கிளாஷ் விடாத விஜய்.. வம்பிழுத்த ரஜினி ரசிகர்!..

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியானதும் உடனடியாக நடிகர் விஜய் தனது கோட் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இந்த முறை விஜய் ரஜினிக்கு போட்டியாக படத்தை வெளியிட்டு தன்னுடைய கெத்தை நிரூபிப்பார் என நினைத்த நிலையில், விஜய் பயந்து போய்விட்டார் என ரஜினிகாந்தின் ரசிகர் சத்யன் ராமசாமி புதிதாக வீடியோ ஒன்றை போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: விஜய்யின் ‘கோட்’ அப்டேட்டுக்கு போட்டியாக சூர்யா வெளியிட்ட கங்குவா மேட்டர்!.. அப்போ கிளாஷ் இருக்கா?..

ஜூன் மாதம் இந்தியன் 2, ஆகஸ்ட் மாதம் புஷ்பா 2, அக்டோபர் மாதம் வேட்டையன், அதிகபட்சமாக நவம்பர் மாதம் விடாமுயற்சி படங்கள் வெளியாக உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் தான் பெரிய போட்டி இல்லாத மாதம் என நினைத்து நடிகர் விஜய் தனது கோட் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் என பங்கமாக கலாய்த்து உள்ளார் சத்யன் ராமசாமி.

நடிகர் விஜய் படங்கள் எப்போதுமே பண்டிகை தினத்தன்று வெளியாகி வசூலை காட்டுமே தவிர பண்டிகை அல்லாத நாட்களில் ரிலீசாக வாய்ப்பே இல்லை. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தையும் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் செய்துள்ளார்.

இதையும் படிங்க: அமலாபால் அசந்த நேரமா பார்த்து ஆட்டையை போட்டுட்டாரே!.. வைரலாகும் வீடியோ.. என்ன நடக்கது அங்க!..

கடந்த ஆண்டு வாரிசு ரிலீஸ் தேதி பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், துணிவுடன் நடிகர் அஜித் வாரிசு படத்துடன் மோதினார். ஆனால் அந்தத் துணிவு எல்லாம் நடிகர் விஜய்க்கு சுட்டு போட்டாலும் வராது.

ரஜினிகாந்த் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் காத்திருந்த நிலையில், அந்த அறிவிப்பு வந்ததும் அடுத்து வேறு யாரும் செப்டம்பர் மாதத்தை பிடித்து விடக்கூடாது என்பதற்காக அந்த மாதத்தில் தனது படத்தின் ரிலீஸை வைத்துள்ளார் விஜய் என சத்யன் ராமசாமி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உலகத்துலயே பொண்டாட்டியை ஒருதலையா காதலிக்கிறது இவராத்தான் இருப்பாரு!.. ரோமியோ விமர்சனம் இதோ!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top