Connect with us
ranjith

Cinema News

50 வருட சினிமா அனுபவம்.. சுக்கு நொறுக்கிய பா.ரஞ்சித்! ரஜினிக்கு காட்டிய நன்றிக்கடனா இது

Pa.Ranjith: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக குறிப்பிட்ட ஜாதிக்கு எதிராக பரப்பப்படும் கொள்கைகள், அதிகாரங்கள் குறித்து விமர்சனம் செய்யும் வகையில் திரைப்படங்களாக வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் வந்த பிறகு இந்த மாதிரியான படங்கள் அதிகமாகவே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாரிசெல்வராஜ், வெற்றிமாறன் இவர்கள் எல்லாம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறிப்பாக ஜாதி வெறிப்பிடித்த கூட்டங்களை ஒடுக்கும் வகையில் தங்கள் படங்களின் மூலம் தக்க பதிலடி கொடுத்து வரும் இயக்குனர்கள்.

இந்த நிலையில் இன்று காலை முதல் பா. ரஞ்சித்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அருகில் இருந்த ஒருவர் ‘ரஜினியை வைத்து தலித் அரசியலை பேசுறீங்க. ஆனால் அது அவருக்கு புரிந்ததா இல்லையா என தெரியவில்லை. ’ என கேட்க அதற்கு பா. ரஞ்சித் நக்கலாக சிரிக்கிறார். இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?

இப்படி ஒரு கேள்வியை கேட்கும் பட்சத்தில் சாதாரணமாக பதில் சொல்வதை விட்டுவிட்டு நமட்டு சிரிப்பால் பதில் சொல்லியிருக்கிறார் பா. ரஞ்சித். ரஜினியின் 50 வருட கால சினிமா வாழ்க்கையில் கதையின் ஸ்கிரிப்ட் என்னவென்று கூடவா தெரியாமல் இவ்வளவு வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்? என வலைதளங்களில் பா. ரஞ்சித்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதே பா.ரஞ்சித்தான் ஒரு மேடையில் என்னுடைய ஆதங்கம், என்னுடைய அரசியல் இதை ரஜினி போன்ற ஒருவர் வந்து சொன்னால்தான் அது எளிதாக மக்களுக்கு போய் சென்றடையும் என கூறியிருந்தார். அதன் விளைவுதான் காலா மற்றும் கபாலி போன்ற படங்கள். கபாலி முடிந்ததும் ஒரு கமெர்சியல் பேக்கேஜாக ஒரு படம் பண்ணலாம் என ரஞ்சித்திடம் ஏற்கனவே ரஜினி சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா!.. முண்டா பனியனில் அழகை காட்டும் காவ்யா!…

ஆனாலும் ரஞ்சித் அவருடைய சித்தாந்தம் பற்றிய கதையைத்தான் மீண்டும் எடுத்தார். அதுதான் காலா. இருந்தாலும் அந்தப் படம் ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தது. வசூலிலும் வெற்றிப்பெற்றது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினியை ஒரு பொது மேடையில் நக்கலான சிரிப்பால் அவமானப்படுத்தியிருக்கிறார் பா.ரஞ்சித். இதை ரசிகர்கள் பெரிதும் எதிர்த்து வருகின்றனர்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top