தலைவர் 171 டைட்டிலே இப்படின்னா படம் எப்படி இருக்கும்?.. மெகா அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

Published on: April 21, 2024
---Advertisement---

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்துள்ளது. நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

துப்பாக்கி, கத்தி, சர்க்கார் படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாசுக்கு தர்பார் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனுக்கு ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினிகாந்த் வழங்கிய நிலையில் அந்த படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

இதையும் படிங்க: ஒரே வருட இடைவெளியில் 2 முரண்பட்ட பாடல்கள்… கண்ணதாசன் இப்படி எழுத என்ன காரணம்?

விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு தலைவர் 171-வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்தப் படத்தின் டைட்டில் மற்றும் அறிமுக வீடியோ நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கனகராஜ் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் டிஸ்கோ என்கிற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார். “நாளை மாலை 6 மணி முதல் D.I.S.C.O” என லோகேஷ் கனகராஜ் பதிவிட்டு உள்ள நிலையில் இதுதான் படத்தின் தலைப்பா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘அலைபாயுதே’ படத்திற்கு பிறகு நயன்தாராவால் கிடைச்ச கிஃப்ட்! மாதவன் சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா

ரோலக்ஸ், லியோ, டிஸ்கோ என வித்தியாசமாக புதிய புதிய கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வருகிறாரே லோகேஷ் கனகராஜ் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுதான் டைட்டிலா? அல்லது வேறு ஏதாவது படத்தின் தலைபுக்கு இது குறியீடா என்பது நாளை மாலை 6 மணிக்கு தெரிந்து விடும். தங்கமகன் படத்தில் DISCO – டிஸ்கோ என்கிற பாடல் இடம்பெற்றிருக்கும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

இதையும் படிங்க: புளூசட்டை மாறன் சொல்வது சரிதான்!.. விஜய் ஆண்டனி சைலண்ட்டா இருக்கணும்!. பிரபலம் சொல்றாரு!..

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.