Cinema News
ஆஸ்கார் விருதுக்கு வந்த ஆபத்து.. 15 வருஷம் கழிச்சு ரஹ்மான் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா?..
AR Rahman: இளையராஜாவிற்கு பிறகு இசையில் ஒரு மாபெரும் புரட்சி செய்தவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். அதுவரை கிராமத்து பின்னனியில் அமைந்த இசையையே கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ரஹ்மானின் வருகை ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இளையராஜா பேக்ரவுண்ட் ஸ்கோரில் கூட ஒரே ஒரு சிங்கிள் இசையை மட்டும் வைத்து கதையை நகர்த்துவார்.
ஆனால் ரஹ்மான் பேக் ரவுண்ட் ஸ்கோரில் சின்ன சின்ன சவுண்ட்ஸ், கோரஸ் என சில புதுமைகளை கொண்டு வந்தார்.கிழக்கு சீமையிலே படத்தில் ரஹ்மான் மியூஸிக் என்று சொன்னதும் எல்லாரும் பயந்தார்கள். ஏனெனில் அதுவரை பாரதிராஜா இளையராஜா கூட்டணிதான் மாஸ் காட்டிக் கொண்டு வந்தனர். அதுவும் பாரதிராஜா கிராமத்து கதைகளை அச்சு பிறழாமல் எடுப்பவர்.
இதையும் படிங்க: அந்த படம் ஓடலன்னா கன்னியாஸ்திரி ஆகி இருப்பேன்.. விஜயகாந்த் பட நடிகை சொன்ன பகீர் தகவல்…
ஆனால் ரஹ்மான் சிட்டியில் இருந்து வந்தவர். எப்படி செட் ஆகும் என்று பலரும் விமர்சித்தார்கள். இருந்தாலும் பாரதிராஜா தயங்கியே ரஹ்மானை இசையமைக்க வைத்தார். ஆனால் இன்று எந்த காதுகுத்து விழாவானாலும் மானூத்து மந்தையிலே பாடல் இல்லாமல் அந்த விழா முற்றுப் பெறாது. வைரமுத்துவே ஒரு சமயம் இந்த பாடலை இது ஒரு எழுதப் படாத தேசிய கீதம் என்று கூறியிருந்தார்.
அந்தளவுக்கு ரஹ்மானின் புகழ் இன்று வரை உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றது. ஆனால் இவர் மீது திடீரென பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இன்று ஹிந்தியில் ஒரு பிரபல தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருப்பவர்தான் இந்த ராம்கோபால் வர்மா. ஹிந்தியில் ரங்கீலா , சிவா போன்ற படங்களை எடுத்தவர். தமிழிலும் படத்தை இயக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு பக்கம் கல்யாணம்… இன்னொரு பக்கம் கர்ப்பம்… கடுப்பாகி போன பாக்கியலட்சுமி ரசிகர்கள்!..
இவர்தான் ரஹ்மான் மீது அந்த குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஆனால் அந்த இசை உண்மையிலேயே ரஹ்மானுடையது இல்லை என்றும் அது பிரபல இசையமைப்பாளர் சுக்விந்தர் சிங்கின் இசை என்றும் அவரை காப்பி அடித்துதான் ரஹ்மான் ஜெய்ஹோ பாடலுக்கு இசையமைத்தார் என்றும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
சுக்விந்தர் சிங் வேறொரு படத்திற்காக போடப்பட்ட இசையை அந்தப் படம் டிராப் ஆனதால் அதை ரஹ்மான் ஜெய்ஹோ பாடலுக்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும் ராம்கோபால் வர்மா கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உயிரே படத்தில் தையா தையா பாடலும் சுக்விந்தர் சிங்கின் இசைதான் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இதை பற்றி ரஹ்மான் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இதையும் படிங்க: விஜயாவுக்கு முத்து கொடுத்த பல்ப்…மனோஜுக்கு ரோகிணி கொடுத்த ஐடியா… ஆசை தான்!