கலங்கி நின்ன இயக்குனர்!.. கை கொடுத்த கமல்!.. அவர் இல்லன்னா ரஜினிக்கு ஒரு கிளாசிக் படமே இல்ல!..

Published on: April 22, 2024
rajini
---Advertisement---

Rajini Kamal: களத்தில்தான் போட்டியாளர்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர்களை போல் ஒரு நல்ல நண்பர்களை பார்த்திட முடியாது. அந்தளவுக்கு இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ரஜினியும் கமலும். 80களில் இருந்து இன்று வரை இவர்களுக்கு இடையேயான அந்த நெருக்கம் அப்படியேதான் இருந்து வருகிறது.

மேடைகளில் இவர்கள் பேசிக் கொள்ளும் முறை ஆரத் தழுவி அணைப்பது என இப்படியும் ஒரு போட்டி நடிகர்கள் இருக்கக் கூடுமா என்றுதான் யோசிக்க வைக்கிறது. இந்த நிலையில் ரஜினி நடித்த ஒரு படத்தில் பணப்பிரச்சினை ஏற்பட கொஞ்சம் கூட யோசிக்காமல் ஓடி வந்து உதவியிருக்கிறார் கமல். ரஜினியின் கெரியரில் மிக முக்கியமான திருப்பு முனையாக அமைந்த படம் ‘முள்ளும் மலரும்’ திரைப்படம்.

இதையும் படிங்க: சனியன் ஒன்னுத்துக்கும் யூஸ் இல்ல!.. டோட்டலி வேஸ்ட்!.. ராதிகாவை திட்டித்தீர்த்த கமல்ஹாசன்!..

பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் முள்ளும் மலரும். இந்தப் படத்தின் ஒரு சில காட்சிகள் ஆரம்பத்தில் ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாமல்தான் இருந்ததாம். தயாரிப்பாளரிடம் பணம் கேட்டால் முடியாது என சொல்லியிருக்கிறார். அப்பவே மகேந்திரனுக்கு தெரிந்துவிட்ட்தாம் இந்தப் படம் ஓடாதென்று.

அதன் பிறகு மகேந்திரன் கமலிடம் இதை பற்றி ஆலோசித்திருக்கிறார். இந்தப் படத்தில் என்ன பிரச்சினை என தெரிந்து கொண்ட கமல் தனக்கு போட்டி நடிகராக ஒருவர் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று கூட யோசிக்காமல் மகேந்திரனிடம் ‘பிரஸ் மீட் ஏற்பாடு செய்யுங்கள், நான் பணம் தருகிறேன். ரிலீஸ் செய்யலாம்’ என்று சொல்லி கமல் அந்தப் படத்திற்காக பண உதவி செய்தாராம்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா விவகாரத்தில் தவித்த ரஜினிகாந்த்… ஈகோ இல்லாமல் உதவிக்கு வந்த ஜெயலலிதா!…

கமல் மட்டும் இல்லை என்றால் இந்தப் படமே இல்லை, நானும் உங்கள் முன் நின்றிருக்க மாட்டேன் என்று முன்பு ஒரு விழா மேடையில் மகேந்திரன் கமலை பற்றி கூறியிருப்பார். ‘கெட்டப்பையன் சார் இந்த காளி ’ என்ற வசனத்தையும் நாம் மறந்துவிட முடியாது. பாலசந்தர் கூட ரஜினியிடம் ‘உனக்கு பிடித்த படம், பிடித்த இயக்குனர், பிடித்த கதாபாத்திரம்’ என்ற கேள்வியை கேட்டிருப்பார்.

அதற்கு பதிலளித்த ரஜினி பிடித்த படம் முள்ளும் மலரும் என்றும் பிடித்த இயக்குனர் மகேந்திரன் என்றும் பிடித்த கதாபாத்திரம் காளி என்றும் கூறியிருப்பார். அந்தளவுக்கு இந்தப் படம் ரஜினியின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

mahi
mahi

மேலும் மகேந்திரனுக்கும் ரஜினிக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது. ஒரு சிகரெட் மூலமாக ஆரம்பித்த நட்பு முள்ளும் மலரும் படம் தொடங்க காரணமாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: முன்னாள் காதலி பற்றி கூலா பதில் சொன்ன 3 பிரபலங்கள்!.. சிம்பு சொன்னதுதான் ஹலைட்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.