அந்த படத்தில் நடக்காத ரஜினியின் ஆசை.. முத்து படத்தால் நிறைவேறிய அதிசயம்!..

Published on: April 23, 2024
---Advertisement---

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஒரு படத்தில் ஆசைப்பட்ட ஒரு விஷயம் அவரின் முத்து படத்தால் தான் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எந்தவித சினிமா பின்புலனும் இல்லாமல் அடி ஆழத்தில் இருந்து எழுந்து வந்தவர் ரஜினிகாந்த். பெரும் போராட்டத்துக்கு இடையே அபூர்வ ராகங்கள் படத்தில் வலுவான ரோலால் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். தொடர்ச்சியாக சில படங்களில் வில்லனாகவும் நடித்து வரவேற்பை பெற்றார். ஆனால் அவரை குருநாதர் கே.பாலசந்தர் ஹீரோவாக்கி அழகு பார்த்தார்.

இதையும் படிங்க: சொன்னீங்களே செஞ்சீங்களா… விஜயகாந்த் விஷயத்தால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்!…

80களில் இருந்த ரசிகர்களை சரியாக கவர்ந்தார். வரிசையாக ஹிட் கொடுத்த ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்து கிடைத்தது. தற்போது 171 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்துக்கு கூலி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. ரஜினியை தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் ரஜினிக்கு முதல் படத்தில் பெரிய ஏமாற்றம் நடந்ததாம்.

ரஜினியின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் ரிலீஸாகி நூறு நாளை தாண்டி ஓடியது. இப்படத்தின் நூறாவது நாள் விழாவில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார். படத்தில் இடம்பெற்ற கலைஞர்களுக்கு நினைவு கேடயங்கள் வழங்கினாராம்.

இதையும் படிங்க: மீண்டும் வந்த மனோஜ் காதலி… ரோகிணி நினைக்கிறதெல்லாம் நடக்குதே… நல்லாவா இருக்கு!

அவர் வேறொரு முக்கிய நிகழ்வுக்கு போகவேண்டி இருந்ததால், இயக்குனர் பாலசந்தர், கமலஹாசன், ஸ்ரீவித்யா உள்பட சிலருக்கு மட்டும் கேடயங்களை வழங்கினார். ரஜினிகாந்த் உட்பட மற்றவர்களுக்கு ஏ.வி.எம். நிறுவனர் மெய்யப்ப செட்டியார் தான் கேடயங்களை வழங்கினார். முதல்வரிடம் கேடயம் வாங்கவில்லையே என ரஜினிக்கு மனகுறை இருந்ததாம். அது நீண்டகாலம் கழிந்து முத்து படத்தில் சிறப்பாக நடித்ததற்கு  தமிழக அரசின் பரிசை கலைஞரிடம் பெற்ற போது அந்த மனக்குறை தீர்ந்ததாம்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.