விஜய நினைச்சா பாவமா இருக்கு!.. சரியா வராது!. எச்சரிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!...

தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவில் நுழைந்து வளர்ந்தவர் நடிகர் விஜய். அப்பா பெரிய இயக்குனர் என்பதால் ‘எனக்கு சினிமாவில் நடிப்பதுதான் ஆசை.. படிக்க மாட்டேன்’ என அடம்பிடித்தார். மகன் விஜய் அதில் உறுதியாக இருக்கவே எஸ்.ஏ.சியும் வேறு வழியின்றி சொந்த காசைப்போட்டு ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தை இயக்கினார்.

படம் வெற்றியை பெறவில்லை. ஆனாலும், தனது மகனை பெரிய ஹீரோ ஆக்க வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து அவரை வைத்து ரசிகன், தேவா, மாண்புமிகு மாணவன் ஆகிய படங்களை தயாரித்த இயக்கினார். ஆனாலும், எடுபடவில்லை. விஜய் மற்ற இயக்குனர்களின் கதையில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டர்.

இதையும் படிங்க: எல்லாரையும் கெடுத்துட்டாரு விஜய்!.. அந்த சூப்பர் ஸ்டாரும் சரக்கு பாட்டிலுடன் பாட்டு போட்டுருக்காரே!

ஆனால், யாரும் பிடிகொடுக்கவில்லை. அப்போதுதான் இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க விஜய் டேக் ஆப் ஆனார். அதன்பின் விஜயின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. சினிமாவில் நடிப்பது மட்டுமே விஜயின் வேலை. கதை கேட்பது, சம்பளம் நிர்ணயிப்பது, கால்ஷீட் தேதி கொடுப்பது என எல்லாவற்றையுமே எஸ்.ஏ.சி பார்த்துக்கொண்டார்.

ஆனால், ஒரு கட்டத்தில் விஜய்க்கு இது பிடிக்கவில்லை. அப்பாவை கழட்டிவிட்டார். அதோடு, நீலங்கரையில் தனி பங்களா கட்டி அங்கு குடியேறினார். அதோடு, அப்பாவை பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்தார். இது தொடர்பாக பல பேட்டிகளிலும் புலம்பி வந்தார் எஸ்.ஏ.சி. இப்போது விஜய் அரசியலுக்கும் வந்துவிட்டார்.

இதையும் படிங்க: புளூசட்டை மாறன் சொல்வது சரிதான்!.. விஜய் ஆண்டனி சைலண்ட்டா இருக்கணும்!. பிரபலம் சொல்றாரு!..

விஜய்க்கு பக்கபலமாக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ. அதன்பின் விஜய் கட்சியில் இணைந்து இப்போது முதல் இடத்தில் இருக்கிறார். விஜயின் அரசியல் நடவடிக்கைகளை முடிவு செய்பவர் இவர்தான். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சி புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக பல கருத்துக்களையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

pussy

‘புஸ்ஸி ஆனந்த் ஆன்லைனில் ஒரு குரூப் வைத்திருக்கிறார். ஒரு சேரில் அமர்ந்து தூங்குவது போல போஸ் கொடுத்து அதை புகைப்படம் எடுக்க சொல்வார். 50 பேரை வைத்து ஷேர் செய்ய சொல்வார். 100 பேரை வைத்து லைக்ஸ் போட சொல்வார். இது விஜயின் பார்வைக்கு போகும். ‘அட இவ்வளவு கஷ்டப்படுகிறாரே அண்ணன்’ என விஜய் நெகிழ்ந்து போவார். இதுதான் அங்கு நடக்கிறது. புஸ்ஸி ஆனந்த் இருக்கும் வரை விஜய் அரசியலில் டேக் ஆப் ஆக முடியாது’ என எஸ்.ஏ.சி சொல்லி இருக்கிறார்

 

Related Articles

Next Story