உங்க படத்துல ஐட்டம் சாங்!. அஜித்துக்கு நான் ஜோடி!. கோட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நடிகை!…

Published on: April 27, 2024
vijay
---Advertisement---

சினிவாவில் சில நடிகைகளுக்கு ஒரு பாடல் காட்சியே சிறப்பாக அமைந்துவிடும். அதாவது, கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் ஒரு நடிகை ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட போவார். அந்த பாடல் காட்சியில் கவர்ச்சி காட்டி நடனமாடி ரசிகர்களை கவர்ந்து இழுத்துவிடுவார். அதுவே அந்த நடிகையின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்துவிடும்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா மாமா. ஊ ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது அது போல ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டுமென்றால் ஒரு கோடி சம்பளமாக கொடுங்கள் என கேட்கிறாராம்.

இதையும் படிங்க: மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?

ஜெயிலர் படத்தில் தமன்னா இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய காவாலா பாடல் அந்த படத்திற்கே பெரிய புரமோஷனாக அமைந்தது. இந்த பாடல் தமன்னாவை ரசிகர்களிடம் மேலும் பிரபலப்படுத்தி இருக்கிறது. பல கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் தமன்னா இந்த பாடலுக்கு நடனமாடி வருகிறார். மேலும், இவரும் இப்போது ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு கோடி வரை கேட்கிறாராம்.

sree leela

தெலுங்கில் சமீபத்தில் மகேஷ்பாபு நடித்து வெளியான திரைப்படம்தான் குண்டூர் காரம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ஸ்ரீலீலா. இந்த படத்தில் இடம் பெற்று ஒரு குத்துப்பாட்டுக்கு அம்மணி ஆடிய ஆட்டத்தில் ஆந்திராவே அதிர்ந்தது. இந்த பாடலால் இவருக்கு இப்போது தமிழிலும் ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில், விடாமுயற்சிக்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்தது. மகேஷ்பாபு பட பாடல் ஹிட் அடித்ததும் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஒரு ஐட்டம் சாங்கில் ஆட ஸ்ரீலீலாவை அழைத்திருக்கிறார்கள்.

ஆனால், அஜித் படத்தில் கதாநாயகி வேஷத்திற்கு அழைக்க கோட் பட வாய்ப்பை மறுத்திருக்கிறார் ஸ்ரீலீலா என சொல்லப்படுகிறது. அஜித்துடன் ஜோடி போட்டு நடிக்க அம்மணி மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம் ஸ்ரீலீலா.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.