Connect with us

Cinema News

பிரசாந்துக்கு சிவாஜி சொன்ன 3 அட்வைஸ்!.. கோட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை!.. தியாகராஜன் நெத்தியடி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அந்த படத்துக்கும் தனக்கும் சம்மந்தமும் இல்லை என பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தனது புதிய பேட்டியில் பேசியுள்ளார்.

நடிகர் பிரசாந்தை கெடுத்ததே அவரது தந்தை தான் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சினிமா துறையிலேயே முன்வைக்கப்பட்டு வருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிரசாந்த் நல்ல பிள்ளையாக இருந்தால் தப்பா? காலையில் சூட்டிங் செல்வார். சாயங்காலம் ஆனால், வீட்டுக்கு வந்து உடற்பயிற்சி செய்வது நீச்சல் பயிற்சி செய்வது என தனது நேரத்தை செலவிடுவார்.

இதையும் படிங்க: கமல் கையை வச்சே இந்தியன் தாத்தா கண்ணை குத்தும் கல்கி!.. என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சே!..

மற்ற நடிகர்கள் போல பாட்டிக்கும் பப்புக்கும் பிரசாந்த் செல்ல மாட்டார் அதுதான் பலருக்கும் பிரச்சனையா என்று தெரியவில்லை என தியாகராஜன் கேட்டுள்ளார். மேலும் ஒரு முறை சிவாஜி கணேசன் என்னடா உன் பையனை கண்ணிலேயே காட்ட மாட்டியா எனக்கேட்டார். உடனடியாக அவரிடம் பிரசாந்தை அழைத்துச் சென்றேன்.

பிரசாந்தை பார்த்துவிட்டு பெரிய நடிகராக வருவாய் என ஆசிர்வாதம் செய்த சிவாஜி கணேசன் உனக்கு நான் மூணு அட்வைஸ் கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு, தினமும் சூட்டிங் 6:00 மணி என்றால் 5:30 மணிக்கு எல்லாம் மேக்கப்புடன் ஸ்பாட்டுக்கு சென்று விட வேண்டும்.

இதையும் படிங்க: சினேகாவுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா?!.. போட்டு உடைச்சிட்டாரே பிரசன்னா?!…

இரண்டாவது அட்வைஸ் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு நடக்க வேண்டும். அவர் தப்பாகவே ஷாட் வைத்தாலும் அதில் தலையிடக்கூடாது. மூன்றாவதாக நடிகைகளுடன் எந்த ஒரு தொடர்பிலும் இருக்கக்கூடாது. இதை நான் என் மகனுக்கு கூட சொல்லவில்லை.

ஆனால் உனக்கு சொல்கிறேன் என அவ்வளவு அக்கறையாக பிரசாந்துக்கு நல்ல புத்தி சொல்லி அனுப்பினார் சிவாஜி கணேசன். இன்றுவரை அதை அவர் கடைப்பிடித்து வருகிறார். இப்படியெல்லாம் ஒரு மகன் இருந்தால் சினிமாவின் பலருக்கும் பொறாமை இழப்பான் செய்யும் என தியாகராஜன் தனது மகன் பிரசாந்த் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இப்படி தலைப்பு வச்சா படம் ஓடாது!.. விஜய்க்கு இப்படி ஒரு ராசி இருக்கு!.. பொங்கும் பிரபலம்…

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top