Cinema News
அனுபமா போரடிச்சுடுச்சு!.. அடுத்து அந்த ஹீரோயின் உதட்டை கடிக்க துடிக்கும் டில்லு ஸ்கொயர் ஹீரோ?..
சாமி ஸ்கொயர் போல டில்லு ஸ்கொயர் பெயரைப் பார்த்ததும் தமிழ் சினிமா ரசிகர்கள் தெறித்து ஓடிவிட்டனர். ஆனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் அந்த படத்தை 125 கோடி ரூபாய் வசூல் படமாக மாற்றி விட்டனர்.
மாலிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகடா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படியே அனிமல் படத்தின் ரன்பீர் கபூர் போல இருக்காரே யார் இந்த சித்து என ரசிகர்கள் இந்த காமெடி ரொமான்ஸ் படத்தை பார்த்தனர்.
இதையும் படிங்க: கண்டெய்னர் ஃபுல்லா பணம்!.. தனுஷின் குபேரா படத்தின் கதை இதுதானா?.. லீக் பண்ண போஸ்டர்?..
இந்தப் படத்தை பார்க்க இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. படத்தில் அதிக நேரம் அதிக காட்சிகள் அனுபமா பரமேஸ்வரனை ஹீரோ சித்து லிப் லாக் அடித்துக் கொண்டே இருப்பார். மேலும் ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் என மனுஷன் படத்தில் மஜாவாக வாழ்ந்திருப்பார்.
இந்நிலையில், சிங்கம் 3 போல டில்லு க்யூப் படம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த முறை ஹீரோவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கப் போவதாகவும் அவருடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: தாமரையை மலர வைக்கும் முயற்சியா இது? தயாராகப் போகும் அண்ணாமலை பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பூஜா ஹெக்டே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்த நிலையில் மகேஷ் பாபு தனது குண்டூர் காரம் திரைப்படத்திலிருந்து பூஜாவை நீக்கி படத்தைக் காப்பாற்ற நினைத்தார். ஆனால், எந்தப் படத்திலும் பூஜா ஹெக்டே பிரச்சனை இல்லை அந்தப் படத்தின் கதை மற்றும் இயக்குனர் தான் பிரச்சனை என்பது குண்டூர் காரம் தோல்விக்கு பிறகு உறுதியானது.
இந்நிலையில், பூஜா ஹெக்டே நிச்சயம் இந்த சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பாகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமாவது அவருக்கு கை கொடுக்க மீண்டும் எனது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், அனுபமாவை விட பூஜா ஹெக்டேவுடன் அதிக முத்தக் காட்சிகள் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் பறந்து வருகின்றன.
இதையும் படிங்க: யார் சொல்லியும் கேட்காத அஜித் ஆதிக் சொல்லி கேட்டாரே! இதுதான் ஃபேன் பாய் சம்பவமா?