Connect with us

Cinema News

உங்க பொண்ணு ஒழுங்கா? ஷகீலா கேட்ட கேள்வியில் வெட்கி தலைகுனிந்த பயில்வான்!. செம பஞ்சாயத்து!..

Bayilvan Ranganathan: திரைவிமர்சகரான பயில்வான் ரங்கநாதனை அவர் மகள் குறித்த ரகசியத்தினை பொதுவெளியில் கூறி பதிலடி கொடுத்து இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபலங்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையாக மாறி நெகட்டிவ் புகழைத் தேடிக் கொண்டவர் பயில்வான் ரங்கநாதன். தமிழில் சில படங்கள் நடித்தவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையாமல் போனது. இதனால் பிரபலங்கள் குறித்து ரகசிய செய்தி என ஏகப்பட்ட விஷயங்களை வீடியோக்களில் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த நடிகை மீது ஆனந்தராஜுக்கு இருந்த ஒன் சைட் லவ்!.. வில்லன் நடிகரின் லவ் ஸ்டோரி தெரியுமா?…

இதுக்கு பல பிரபலங்கள் நேரடியாகவே அவரிடம் சண்டைக்கு சென்று  நிகழ்வும் நடந்திருக்கிறது. இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் மற்றும் ஷகீலா இருவரும் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருக்கின்றனர். அதில், பயில்வான் ரங்கநாதன் முன்னர் அமர்ந்திருக்கும் நடிகை ஷகீலா உங்க மகள் யாரை காதலிக்கிறா தெரியுமா என கேள்வியை முன்வைக்கிறார்.

அவ ஒரு பொண்ண காதலிக்கிறா என்கிறார். இதை கேட்டு கடுப்பாகும் பயில்வான் நாக்கு அழுகிடும் என்கிறார். எனக்கெல்லாம் அழுகாது. உங்க பொண்ணு அந்த பொண்ணும் உங்க வீட்டு வாசலில் நின்னு பேசின விஷயம் எல்லாம் என் காதுக்கு வந்து இருக்கு எனத் தொடர்ந்து பேசுகிறார். என் பொண்ண பத்தி எதுக்கு இப்படி பேசுறீங்க என பயில்வான் கேட்க நீங்க நடிகைகளை பற்றி அவதூறாக கூறும் போது அப்படித்தானே அவங்கள பெத்த அம்மாக்களுக்கும் இருந்திருக்கும் என பதிலடி கொடுக்கிறார்.

இதையும் படிங்க: பெத்த சம்பளமோ?… தனுஷ் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் இவர் தானாம்… உஷாரு தான் நீங்க…

என் காதுக்கு வந்த விஷயத்தினை தான் நான் கூறினேன் என ஷகீலா கூறுகிறார். நான் பிரபலங்கள் குறித்து விசாரித்து தான் கூறுவேன் என பயில்வான் கூற நாப்பது சதவீதம் தெரிஞ்ச விஷயத்துல 60% உங்க பொய்யை சேர்த்து தானே சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்கிறார் ஷகீலா. உங்களுக்கு தெரியாம கூட இருந்திருக்கலாம். வெளியில இருப்பவங்க மேல கவனம் செலுத்தி உங்க பொண்ண கவனிக்காம விட்ராதீங்க எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

ஷகீலா வீடியோவைக் காண: https://www.facebook.com/watch/?mibextid=D5vuiz&v=359159800477000&rdid=ovygKQsjHXZ9ktta

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top