ஸ்டார் படத்துக்கு சிக்கலா மாறிய அரண்மனை 4!.. வார நாட்களிலும் வசூல் வேட்டை நடத்துதே!..

Published on: May 7, 2024
---Advertisement---

சுந்தர் சி இயக்கி நடித்து வெளியான அரண்மனை 4 திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பான வசூல் வேட்டையை நடத்திய அந்த படம் திங்கட்கிழமையும் நல்ல வசூலை அள்ளி இருப்பது தியேட்டர் ஓனர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுந்தர் சி தொடர்ச்சியாக இதுவரை 4 அரண்மனை படங்களை இயக்கியுள்ளார். எல்லா படங்களின் டெம்பிளேட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக பேய் பழிவாங்கத் துடிப்பதும் கடைசியில் அது நினைத்தது நிறைவேறாமல் போவதும், இறுதியில் அம்மன் அருளால் கிளைமேக்ஸ் முடிவதுமாகவே இருக்கும்.

இதையும் படிங்க: சூட் கேஸ வெயிட்டா காட்ட இயக்குனர் செஞ்ச ட்ரிக்! ‘காதல் கோட்டை’ அனுபவம் குறித்து மனம் திறந்த கமலி

இந்த படத்தில் பழிவாங்க துடிப்பது போல தமன்னாவின் கதாபாத்திரம் சித்தரிக்காமல் பாக் எனும் கொடிய பேயிடம் இருந்து செத்த பின்பும் தனது குழந்தைகளை காப்பாற்ற எப்படி போராடுகிறார் என்பதை படமாக்கி உள்ளார். ஆனால், மற்றபடி அதே அம்மன் அருள் கிளைமேக்ஸில் அந்த பாக் பேயை கொல்வது போன்றே படத்தை தனது அரண்மனை டெம்பிளேட்டுக்குள் வைத்தே போராடிக்காமல் கொடுத்துள்ளார்.

அரண்மனை4 திரைப்படம் இதுவரை உலக அளவில் 22.15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஏழு கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில், திங்கட்கிழமை 3 கோடி ரூபாய் வசூல் செய்து தொடர்ந்து நிலையாக அரண்மனை 4 திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: பாத்ததும் ஷாக் ஆயிட்டோம்!.. டிரெஸ்ஸே அப்படித்தானாம்!.. கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்!..

கில்லி ரிலீஸ் வசூலான 25 கோடி ரூபாயை இன்று அல்லது நாளைக்குள் அரண்மனை 4 திரைப்படம் கடந்துவிடும் நினைதல் பார்க்கப்படுகிறது. முதல் வாரம் படம் மிகப்பெரிய அளவில் ஓடிய நிலையில் இந்த வாரமும் வார விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக அரண்மனை 4 படத்தை பார்க்கவே ஆவலாக இருப்பதாக கூறுகின்றனர்.

அரண்மனை 4 திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி கவின் அடித்துள்ள ஸ்டார் திரைப்படத்துக்கு பெரும் சிக்கலை உண்டாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் மே 10 ஆம் தேதி கவின் அடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து விட்டால் தப்பித்து விடும், கொஞ்சம் சிக்கினாலும் மொத்தமாக சரிந்து விடும் என்கின்றனர்.

இதையும் படிங்க: அதிரடி காட்டும் அனுபமா பரமேஸ்வரன்!.. அடுத்தடுத்து இத்தனை படங்களில் கமிட் ஆகியுள்ளாரே!..

இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்த நிலையில், அரண்மனை 4 படத்தை விட சிறப்பாக வசூல் செய்யுமா? அல்லது அரண்மனை 4 அலையில் சிக்கித்தவிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.