Connect with us

Cinema News

அஜித் இதனாலதான் போட்டோ எடுத்தா கோபப்படுறாரா? ரகசியத்தை போட்டுடைத்த நடிகர்

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படவேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதனை அடுத்து ஆதி ரவிச் சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் இணைய இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் ஜூன் மாதத்தில் இருந்து ஆதித் ரவிச்சந்திரன் உடன் அந்த புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார் அஜித்.

அடுத்தடுத்து பல பெரிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் அஜித் இன்று தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் என்றால் அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே காரணமாகும். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்த அஜீத் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கிறார். இரண்டு மூன்று படங்களில் நடித்து அதில் இருந்து ரசிகர் மன்றத்தை வைத்திருக்கும் நடிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோலிவுட்டின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் அஜித் ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

அதுதான் திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் ரசிகர்கள் தான் என அனைவருக்கும் தெரியும். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் என தங்கள் தலைவர்களை கொண்டாட ரசிகர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது. ஆனால் இதை அஜித் எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதே இல்லை.

அவர் பெரும்பாலும் அவருடைய நேரத்தை சுதந்திரமாக கழிக்க விரும்புபவர். படப்பிடிப்பு போக யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என விரும்புபவர். இந்த நிலையில் ஆடுகளம் நரேன் அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். இருவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றனர். அந்த படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துடன் ஏற்பட்ட அனுபவங்களை ஆடுகளம் நரேன் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

அஜித் ஆடுகளம் நரேனிடம் எனக்கு சமையல் செய்வது பிடிக்கும். பரிமாறுவதும் பிடிக்கும் என கூறுவாராம். படப்பிடிப்பு முடிந்ததும் ஆடுகளம் நரேனிடம் அஜித் உங்களுக்கும் காட்சி முடிந்து விட்டது. எனக்கு முடிந்து விட்டது. வாருங்களேன். அங்கு கொஞ்சம் தனியாக உட்கார்ந்து பேசுவோம் என அழைப்பாராம். அதற்கு நரேன் இங்கேயே அமர்ந்து பேசலாமே என கூறும் போது இங்கு எதுக்கு சார்? இங்கே உட்கார்ந்து பேசினால் கொஞ்சம் டிஸ்டபர்ன்ஸ் அதிகமாக இருக்கும். அதனால் அங்கு தனியா அமர்ந்து பேசுவோம் என செட்டில் இருந்து சிறிது தூரம் விலகி பேசிக் கொண்டிருப்பார்களாம்.

இதையும் படிங்க: தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி ரோல் இவருக்கு தானாம்… அசால்ட்டாக தட்டி தூக்கிய நடிகர்…

அந்த நேரத்தில் ஒரு ரசிகர் ஓடி வந்து படம் எடுக்க வந்தாராம். அதை பார்த்ததும் அஜித் கோவப்பட்டு கத்தி விட்டாராம். உடனே ஆடுகளம் நரேன் எதுக்கு சார் இவ்வளவு கோபப்படுறீங்க என கேட்கும் போது பின்ன என்ன சார் நாம் நம்முடைய பிஸியான செட்யூலில் நமக்கு கிடைக்கும் நேரமே சிறிதளவு தான். அந்த நேரத்திலும் நம் மனதில் பட்டதை பேசிக் கொண்டிருக்கிறோம்.

அதுவும் இப்படி சொல்லாமல் வந்து போட்டோ எடுப்பது எனக்கு பிடிக்காது. ஏனெனில் நான் தலையை சொரிந்து கொண்டிருப்பேன். கன்னத்தை தடவி கொண்டிருப்பேன். மூக்கை நோண்டிக் கொண்டிருப்பேன். இப்படி இருக்கும்போது அவர்கள் போட்டோ எடுத்தால் நன்றாகவா இருக்கும்? வந்து என்னிடம் கேட்டு போட்டோ எடுத்தால் நான் தாராளமாக எழுந்து நின்று போஸ் கொடுக்கப் போகிறேன் எனக் கூறினாராம். உடனே அந்த ரசிகாரிடம் போய்விட்டு நாளை வாருங்கள். போட்டோ எடுக்கலாம் என தன்மையாக சொல்லி அனுப்பினாராம். இப்படிப்பட்ட மனிதர் தான் அஜித் என ஆடுகளம் நரேன் கூறினார். இதிலிருந்து அவருக்கு உண்டான ஸ்பேஸை கொடுக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: பல்ப் வாங்கிய பாட்டை ஹிட்டடிக்க ஆசைப்பட்ட விஜய் ஆண்டனி… தளபதி படத்தில் நடந்த தில்லாலங்கடி…

Continue Reading

More in Cinema News

To Top