Connect with us
Sivaji

Cinema History

மகளுக்காக 20 நிமிடங்களில் சிவாஜி காட்டிய 36 முகங்கள்… மனுஷன் பின்னிட்டாரய்யா…!

1967ல் வெளியான தங்கை படத்தின் கதை விவாதம் அன்னை இல்லத்தில் நடந்து கொண்டு இருந்தது. ஏ.சி.திருலோகசந்தரும், சிவாஜியும் இணைந்து விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு சிவாஜியின் விவாதம் வியப்பாக இருந்ததாம். எந்த விதப் பந்தாவும் இல்லாமல் நண்பருடன் சகஜமாக உரையாடிக் கொண்டு இருந்தாராம்.

கருணாநிதி கதை வசனம் எழுதிய சிவாஜி நடித்த படம் ராஜா ராணி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூடோன் அரங்கில் நடந்தது. சிவாஜியை எப்படியாவது புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்பது பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆசை.

Thangai movie

Thangai movie

படப்பிடிப்பு இடைவேளையின் போது நான் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என சிவாஜியிடம் கேட்டாராம் ஆனந்தன். உடனே அதனால் என்ன எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம் சிவாஜி. சில காலம் கழித்து பேசும்படம் பத்திரிகை சிவாஜியின் நவரச முகபாவனைகளை புகைப்படமாக எடுத்து தங்கள் இதழில் வெளியிட ஏற்பாடு செய்தது. அந்த பணியை பிலிம் நியூஸ் ஆனந்தனிடம் ஒப்படைத்தது.

ஒருமுறை புகைப்படம் எடுக்க சிவாஜியின் வீட்டுக்கு வந்து விட்டார் ஆனந்தன். அன்று சிவாஜியும் படப்பிடிப்பு முடிந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விட்டார். அதனால் தனது மகள் சாந்தியுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். சிறுமியான சாந்தி தன் தந்தையின் தோள் மீது ஏறி உப்பு மூட்டை சுமக்கச் செய்தாராம். அவரும் எந்த வித பந்தாவும் இல்லாமல் மகளுடன் விளையாடியது ஆனந்தனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

சிவாஜியின் தூய்மையான உள்ளம் அவருக்குப் பிடித்துவிட்டதாம். சிவாஜியைப் பின் தொடர ஆரம்பித்து விட்டார். சிவாஜி பிலிம்ஸில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். திரைத்துறை தகவல்கள், செய்திகளை சேகரித்தார். ஆனந்தன் தன் சொந்த அலுவலகம் போல சிவாஜி பிலிம்ஸைப் பயன்படுத்திக் கொண்டார். தனது மகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த சிவாஜியிடம் புகைப்படம் எடுக்க வந்த விஷயத்தைத் தயக்கத்தோடு தெரிவித்தார் ஆனந்தன்.

Shanthi, Sivaji

Shanthi, Sivaji

பேசும்படத்தின் இந்த வித்தியாசமான கலை நுணுக்கப் பார்வை சிவாஜியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கருணை, வீரம், சிருங்காரம், நகைச்சுவை, வெறுப்பு, பயங்கரம், திகைப்பு, அமைதி, முரட்டுத்தனம் என 9 வகையான பாவனைகளை 4 விதமாக சிவாஜி செய்து காட்டி அசத்தினார்.

20 நிமிடத்தில் ஒரு கலைஞன் எப்படி 36 வகையான நடிப்பைக் காட்ட முடியும்? என்று ஆனந்தன் அசந்து போனாராம். சிவாஜியின் உள்ளுக்குள் இருந்த நடிப்பு அதை சாதித்தது. நவரசங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டது. எதை விடுவது என்றே தெரியவில்லையாம்.

மகளுக்கும் தந்தையைப் போலவே நடிக்க ஆசையாம். அதனால் சாந்தியும் மகளைப் போல நவரசங்களையும் முகத்தில் கொண்டு வந்தாராம். பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்தப் புகைப்படங்களை அவர் பொக்கிஷமாக வைத்து இருந்தாராம். அப்படிப்பட்ட அபூர்வ புகைப்படங்களை அவர் எடுத்ததால் தான் இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top