Connect with us

Cinema News

லக்கி ஸ்டாரா?.. ஃபிளாப் ஸ்டாரா?.. கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் மே 10 ஆம் தேதி நேற்று வெளியான நிலையில், படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் முதல் நாளில் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என தியேட்டருக்கு குவிந்துவிட்டனர்.

ஆனால், அப்போது கூட முதல் நாளில் பெரிய அளவு வசூல் சாதனையை கவின் படைக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு வெளியான மற்ற படங்களுக்கு இது பரவாயில்லை என்கிற ரகத்தில் தான் முதல் நாள் வசூல் உள்ளது.

இதையும் படிங்க: தன் அண்ணன் தற்கொலைக்கு காரணமாக இருந்த மணிரத்னம்! இவ்ளோ ஓப்பனா ஒரு பேட்டியா?

கவின் மற்றும் யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் இந்த படம் இந்த அளவுக்கு கூட வசூல் செய்து இருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆரம்பித்த கதையை விட்டுவிட்டு கடைசிவரை ஆரம்பித்த இடத்திலேயே படத்தை இயக்குனர் இளன் சுற்றி சுற்றி எடுத்தது ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்மெண்ட் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

அரண்மனை 4 படத்துக்கு பொதுமக்கள் கொடுத்துள்ள வரவேற்பு அளவுக்கு ஸ்டார் படத்துக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். சினிமா விரும்பிகள் இந்தப் படத்தை ஒருமுறை பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கு படத்தின் இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட தொய்வுகள் இருப்பது எரிச்சலை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க:  எவ்வளவு நாளாச்சு லாஸ்லியாவை இப்படி பார்த்து!.. மனசை சும்மா கொத்தா கொள்ளையடிக்கிறாரே!..

பிளாக்பஸ்டர் படமாக கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓரளவுக்கு சுமாரான படமாகவே வந்துள்ளது. இந்நிலையில், முதல் நாளில் இந்த படம் தமிழ்நாட்டில் 2 கோடி ரூபாய் வசூலும் பிற மாநிலங்களில் 75 லட்சம் வசூலும் பெற்று மொத்தமாக 2.75 கோடி வசூலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கவின் நடிப்பில் வெளியான டாடா படம் அளவுக்கு இந்த படம் வசூல் செய்ய வாய்ப்பில்லை என்றும் அடுத்து நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கவுள்ள பிளடி பெக்கர் திரைப்படம் தான் அவருக்கு கை கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்… அப்பவே இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா..?

google news
Continue Reading

More in Cinema News

To Top