Ghilli: விஜய் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்னர் ரிலீஸான கில்லி படத்தினை சமீபத்தில் ரீரிலீஸ் செய்தனர். அதன் வசூல் விவரங்கள் தற்போதைய புதிய தயாரிப்பாளர்களுக்கே நெஞ்சுவலியை கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
விஜய், திரிஷா நடிப்பில் தரணி இயக்கிய திரைப்படம் கில்லி. இப்படம் ரிலீஸ் சமயத்தில் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்நிலையில், இந்த வருட தொடக்கத்தில் இருந்தே சூப்பர்ஹிட் படங்களை ரீரிலீஸ் செய்து கொண்டாடி வந்தனர். அந்த வகையில், ஆளவந்தான், பாபா படங்கள் தான் முதலில் திரைக்கு வந்தது.
Also Read
இதையும் படிங்க: இரண்டு நாளுக்கு தான் இந்த பில்டப்பா… அஜித் படக்குழுவால் கடுப்பான ரசிகர்கள்…
அதை தொடர்ந்து காதல் ஹிட் படங்களான 3, வாரணம் ஆயிரம் படங்களை தியேட்டர்காரர்கள் ரிலீஸ் செய்தனர். ஏற்கனவே இந்த வருடம் தமிழ் படங்கள் சரியாக அமையாமல் போனதால் ரசிகர்கள் ரீரிலீசை கொண்டாடினர். ஹவுஸ்புல் ஷோக்களாக திரையரங்கில் படங்கள் ஓடியது. அந்த வகையில், விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட் திரைப்படமான கில்லி திரைப்படத்தினை 4கே தரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நீயா? நானா? வா.. மோதிப் பார்ப்போம்!.. சம்பளத்தை ஏத்துவதில் சண்டை போடும் லோகேஷ் – அட்லீ!..



