Cinema History
சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த வசனகர்த்தா… நடந்தது இதுதான்!..
எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்களுக்கும் அவர்களது படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. வாங்க என்னன்னு பார்ப்போம்.
பெற்றால் தான் பிள்ளையா படம் வெளியானபிறகு சிவாஜியின் இருமலர்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அங்கு சென்றாராம் ஆரூர்தாஸ். அப்போது சிவாஜி ஆரூர் தாஸ் மேல் கடுப்பில் இருந்தாராம். ஏன்னா பெற்றால் தான் பிள்ளையா படம் சிவாஜி நடிக்க வேண்டிய படம். கதை சொன்னது ஆரூர்தாஸ். அப்புறம் ‘எப்படி அது எம்ஜிஆருக்குப் போனது?’ ‘பழசை மறந்துட்டீயா’ என சிவாஜி கேட்க, ஆரூர்தாஸ் ‘அப்படி எதுவும் சொல்லாதீங்க. நான் நாய் மாதிரி நன்றி உள்ளவன்.
இதையும் படிங்க… எழுதிக் கொடுத்த எம்.ஜி.ஆர்!.. நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் நின்ற ஸ்ரீதர்!.. உரிமைக்குரல் உருவானது இப்படித்தான்!..
நீங்க அப்போ என்ன சொன்னீங்கன்னா, இந்தப் படத்தை புதிய பறவை மாதிரி கலர்ல எடுக்கணும். தற்சமயம் அடுத்த படங்களைப் பற்றி முடிவு பண்ணல. தம்பி சண்முகம் பிளான் பண்ணிட்டு சொல்றேன்னு சொன்னதாக நீங்க தான சொன்னீங்க. அந்த சமயத்துல நீங்க சொன்ன பதில் எனக்கு என்கரேஜா இல்ல. கிணத்துல போட்ட கல்லு மாதிரி அந்தக் கதை ஆயிடுச்சு.
ஒரு தடவை எம்.ஆர்.ராதா கொடுத்த பிரஷர்ல இந்தக் கதை ஞாபகம் வந்தது. எம்ஜிஆரிடம் சொன்னேன். கதை அவருக்குப் பிடித்து விட்டது. கதை நல்லாருக்குன்னு சொன்னீங்க. ஆனா உத்தரவாதம் கொடுக்கல’ என்றார் ஆரூர்தாஸ். ‘அட்வான்ஸ் தராததால் தானே இப்படி சொல்ற..’ என சிவாஜி கோபத்தில் கேட்க, அதுக்கு ‘இல்லண்ணே, புதிய பறவைக்கு அட்வான்ஸ் கேட்டா எழுதினேன். இதோ இன்னொரு கதை உங்களுக்காக ரெடியா இருக்கு. கேளுங்க’ என்றாராம் ஆரூர்தாஸ்.
‘தேவையில்ல, அதையும் உன் எம்ஜிஆரிடமே கொடுத்து பிசினஸ் பண்ணிக்கோ… என்னை விட்டுடு’ என்றாராம் சிவாஜி. இதைக் கேட்டதும் சங்கடப்பட்டார். அப்புறம் ‘நீங்க ரெண்டு பேரும் 2 கண்கள். இருவருடைய படங்களுக்கும் எழுதி நான் பேலன்ஸ் பண்ணினேன். எம்ஜிஆர் உங்க படத்துக்கு எழுத வேண்டாம்னு சொல்லல. நீஙகளும் எம்ஜிஆர் படத்துக்கு எழுத வேண்டாம்னும் சொல்லல. நான் என் பேனாவை நம்பித்தான் சினிமாவுக்கு வந்தேன்’ என்று கிளம்பினாராம் ஆரூர்தாஸ்.
இதையும் படிங்க… அட்லியை டீலில் விட்ட அல்லு அர்ஜூன்!.. இவங்கள நம்பவே கூடாது!.. அப்ப அவர்தான் ஹீரோவா?…
அப்போது சிவாஜி கோபத்துடன், ‘எனக்கும் உனக்கும் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்த நிமிஷத்துல இருந்து நீ யாரோ, நான் யாரோ…ன்னு சொல்லிட்டாராம். உடனே ஆரூர்தாஸ், ‘நான் சினிமாவுக்கு வந்த 15 வருஷத்துல எந்த கம்பெனியிலும் போய் சான்ஸ் கேட்டு பிச்சை எடுத்தது இல்ல. நான் தேடிப் போறவன் இல்ல. தேடி அழைக்கப்படுறவன். இனி நான் உங்க படத்துக்கு எழுத மாட்டேன்’ என புறப்பட்டாராம். அதன்பிறகு இருவரும் பிரிந்தார்களா என்றால் அதுதான் இல்லை. சண்டைக்கு முன் 8 படங்கள் எழுதினாராம் ஆரூர்தாஸ். ஆனால் சண்டைக்குப் பின் தான் 20 படங்கள் வரை எழுதினாராம். இதெப்படி இருக்கு?