பஞ்சதந்திரம் படத்தில் இந்த விஷயம் எல்லா இடத்திலையும் இருக்கே… அடங்கப்பா!…

Published on: May 14, 2024
---Advertisement---

Panchathanthiram: கமல்ஹாசன் நடிப்பில் வெற்றி பட வரிசையில் முக்கிய படமாக இருந்தது பஞ்சதந்திரம். இப்படத்தில் ஒரு விஷயத்தினை முக்கிய சீன்களில் பயன்படுத்தி இருப்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் பஞ்சதந்திரம். இப்படத்தில் கமல்ஹாசன், நாகேஷ், ஜெயராம், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யுகி சேது, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்து இருந்தார்.

இதையும் படிங்க:  டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…

1998ம் ஆண்டு வெளியான வெர்ரி பேட் திங்க்ஸ் படத்தினை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கி இருந்தனர். கமல்ஹாசன் நடிப்பு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த எல்லாரின் நடிப்பும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 2002ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தில் பஞ்சதந்திரம் என்ற டைட்டில் பெயரில் மட்டும் ஐந்து இடம் பெறவில்லை. ஐந்து நாயகர்களில் மட்டும் நிற்கவில்லை. இன்னும் அதிகமாக போய் நம்பர்கள் இடம்பெற்ற காட்சிகளில் அதிகமாக ஐந்து என்றே இடம்பெற்று இருந்தது. நண்பர்கள் செல்லும் காரின் நம்பர் ஐந்து தான்.

மேலும், பிணத்தினை இழுத்துக்கொண்டு போகும் போது ஐந்தாவது மாடியில் இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் ஐந்து நண்பர்களும் தங்கி இருக்கும் ரூமின் எண்ணும் 555 என்றே இடம்பெற்று இருக்கும். கமல்ஹாசன் படங்களில் இதை கூட சரியாக கணித்து செய்து இருக்காரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரசிகர்களை கலங்க வைத்த 5 தென்னிந்திய ஸ்டார்களின் டைவர்ஸ்… இவங்க சொன்னது தான் இன்னமும் மறக்க முடியலையே?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.