Cinema News
தமிழ் சினிமாவில் இதான் முதல்முறை… இளையராஜா படத்தில் அந்த விஷயமே இல்லையாம்… சண்டைக்கு வராம இருந்தா சரி!…
Ilayaraja: தமிழ் சினிமாவுக்கு கதை எத்தனை முக்கியமோ அவ்வளவு முக்கியமாக பார்க்கப்படுவது பாடல்கள் தான். இதனால் தான் தமிழில் இசையமைப்பாளர்கள் எண்ணிக்கை எக்கசக்கம். அவர்கள் பாடலுக்கு தவம் இருக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இருக்க இசைஞானி படத்தில் இந்த விஷயமே இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டின் ஜாம்பவான், இசைஞானி இளையராஜாவின் இசைக்கே எக்கசக்க ரசிகர்கள் உண்டு. அவர் இசையமைத்தால் மட்டும் போதும் படம் ஹிட் என்ற நிலை இருந்தது. கதையை கூட கேட்காமல் அவர் இசைக்காகவே படங்களை ரசிக்கவே பல திரையரங்குகள் நிறைந்தது. அப்படிப்பட்ட இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்க முடிவெடுத்தனர். இப்படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: டைரக்டர் பிரச்னையே முடிஞ்சிதானு தெரியலை… தயாரிப்பாளரும் பிரச்னையா? தளபதி69ல் என்ன தான் நடக்குது?
படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. முக்கிய கதாபாத்திரங்கள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், படத்தின் முதற்கட்ட பணிகளும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. யாரெல்லாம் நடிப்பார்கள்? அதற்கு எந்த பிரபலங்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் இதில் முக்கிய கேள்வியே இளையராஜா படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்பது தான். தற்போதைய தகவலின்படி தமிழ் சினிமாவில் முதல்முறையாக இளையராஜா பயோபிக்கில் இசையமைப்பாளரே கிடையாதாம். இளையராஜா இயக்கிய உண்மையான பாடல்களையும், பின்னணி இசையையும் படத்திற்கு பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.