
Thalapathy69: நடிகர் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாக இருக்கும் தளபதி69 திரைப்படத்தின் முக்கிய கதை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் லீக்காகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
விஜய் கோலிவுட்டின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரம். தென்னிந்திய மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக இருக்கிறார். இருந்தும் கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நேரத்திலே சினிமாவில் இருந்து விலக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இருந்தும் தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக ஈடுபடுவேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: ஒருவழியா ஆரம்பிச்சிட்டிங்களே… கோட் படத்தினை அவெஞ்சர் லெவலுக்கு ஸ்கெட்ச் போடும் வெங்கட் பிரபு!
அதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தினை முடித்து இருக்கிறார். இதையடுத்து விஜய் தன்னுடைய சினிமா கேரியரின் கடைசி படமாக தளபதி69 உருவாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தேர்வே பெரிய குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. கோலிவுட்டின் முன்னணியை இயக்குனர்கள் கார்த்திக் முதல் வெற்றிமாறன் வரை பலரது பெயர்கள் அடிபட்டது.
இதில் தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் பெயர் கூட கிசுகிசுக்கப்பட்டது. கடைசியில் இப்படத்தை ஹெச் வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தை முதலில் டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்க இருந்ததாக தகவல்கள் கசிந்தது. ஆனால் அவர்கள் விஜய் தரப்பு கேட்ட 250 கோடி சம்பளத்தால் படத்தில் இருந்து விலகிவிட்டனர்.
இதையும் படிங்க: ஓவராக உண்மையை உடைக்கும் சுசித்ரா… வாயை திறக்காமல் இருக்கும் பிரபலங்கள்… ரகசியம் சொன்ன பிரபலம்!
இதனால் மற்ற நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தளபதி69 படத்தின் கதை இணையத்தில் லீக்காகி இருக்கிறது. ம்க்களுக்காக போராடும் தலைவனின் கதையாக தான் இருக்குமாம். இதற்கான இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் பணிகளும் முடிந்துவிட்டதாம். விஜய் கடைசி படத்தினை அரசியல் படமாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தகவல் வெளியாகி இருக்கிறது.