ஜெய்சங்கர் செய்ததை பாடமாக எடுத்து கொண்டேன்!.. கமல்ஹாசன் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..

Published on: May 22, 2024
jai shankar
---Advertisement---

எம்.ஜி.ஆர், சிவாஜி பீக்கில் இருந்தபோதே சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி ரூட்டில் பயணித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜெய்சங்கர். அந்த காலத்தில் நன்றாக படித்திருந்தும் சினிமாவில் நுழைந்த நடிகர்களில் ஜெய்சங்கர் முக்கியமானவர். அதற்கு காரணம் நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம்.

அதோடு, தயாரிப்பாளர்களின் நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். சம்பள விஷயத்தில் கூட கறார் காட்ட மாட்டார். தயாரிப்பாளர் மிகவும் கஷ்டப்பட்டால் ‘படம் முடிந்து வியாபாரம் ஆனபின் கொடுங்கள்’ என சொல்லிவிடுவார். அதனால்தான், ஜெய்சங்கரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு அவர் எப்படியோ கேப்டனுக்கு இவரு!.. விஜயகாந்தின் காட்ஃபாதர் இவர்தானாம்!….

அதேபோல், பல புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கிய நடிகர் இவர். தயாரிப்பாளரிடம் போதிய பணம் இல்லை என்றால் மற்ற நடிகர், நடிகர்களிடம் பேசி ‘படம் முடிந்தபின் உங்களுக்கு நான் சம்பளம் வாங்கி தருகிறேன். படத்தில் நடியுங்கள்’ என அவரே எல்லோரிடம் பேசி படத்தை எடுக்க உதவி செய்வார்.

அதேபோல், தான் சம்பாதிக்கும் பணத்தில் வெளியே தெரியாமல் பலருக்கும் உதவிகள் செய்திருக்கிறார். மேலும், படப்பிடிப்பில் எப்போதும் கலகலப்பாக இருப்பார். நடிகைகளிடம் மிகவும் டீசண்ட்டாக நடந்து கொள்வார். யாருக்கேனும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர் உதவி செய்வதையே காட்டிக்கொள்ளாமல் உதவி செய்வார். இதற்கு உதாரணமாக கமல்ஹாசனே ஒரு சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: ரூம் விஷயத்தில் புதிய வெடியை கிள்ளி போட்ட பாட்டி… அடுத்த ரவுண்ட் என்ன நடக்குமோ?

ஒருபடத்தில் அவருடன் இணைந்து நடித்து கொண்டிருந்தேன். படப்பிடிப்பு முடிந்ததும் அவரை அழைத்து செல்ல கார் வந்துவிட்டது. ஆனால், எனக்கு கார் வரவில்லை. அதை பார்த்ததும் என்னிடம் வந்து ‘நான் உன்னை வீட்டில் விட்டு விட்டு போகிறேன்’ என அவர் சொல்லி இருந்தால் அவர் எனக்கு உதவி செய்கிறார் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர் அதை செய்யவில்லை.

என்னிடம் வந்த ஜெய்சங்கர் ‘கமல் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். காரில் பேசிக்கொண்டே போகலாம். அப்படியே உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்’ என சொல்லி அழைத்து போனார். உதவி செய்கிறோம் என்பது கூட மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என அவர் நினைத்தது என்னை ஆச்சர்யப்படுத்தியது. எனது வாழ்க்கையில் அதை ஒரு பாடமாகவும் கற்றுக்கொண்டேன்’ என சொல்லி இருக்கிறார் கமல்ஹாசன்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.