Connect with us
kanth

Cinema News

நேராக ரிக்கார்டிங் தியேட்டருக்கே வந்து மன்னிப்பு கேட்ட விஜயகாந்த்! இது எப்போ நடந்தது?

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு மனிதாபிமானம் மிக்க மனிதராக நடிகராக இருந்து வாழ்ந்தவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த். அடுத்தபடியாக மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட நடிகராகவும் இருந்தவர். கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து ஒரு உச்ச நடிகராக இந்த தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். சினிமாவில் இவருக்கு என ஒரு தனி மரியாதை இருக்கிறது.

அதைப்போல தனது அரசியலிலும் இவரை போல ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது. எதிர்கட்சி தலைவராக இருந்து பலமுறை மக்கள் நலனுக்காக பாடுபட்டவர். அவரைப் பற்றி ஏராளமான பல செய்திகள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் பரணி விஜயகாந்த் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: கோபியை அழுகவிடும் ராதிகா மற்றும் ஈஸ்வரி… திடீரென தடம் மாறும் ஜெனி… என்ன அடுத்த பிரச்னையா?

ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்து என்ற பாடல் மிகப் பிரபலமான பாடலாகும். அதை விஜய் அவருடைய சொந்த குரலில் பாடி இருப்பார். அதை ஒரு சமயம் விஜயகாந்த் அவருடைய பேஸ் வாய்ஸில் பாடி காண்பித்தாராம் .அது மிகவும் நன்றாக இருந்தது. அப்பொழுது பரணி விஜயகாந்தை வைத்து எப்படியாவது ஒரு பாடலை பாட வைக்க வேண்டும் என நினைத்தாராம்.

ஆனால் அது முடியாமல் போய்விட்டது என மிகவும் வருத்தத்துடன் கூறினார். மேலும் பரணி அவருடைய திருமண அழைப்பிதழை விஜயகாந்திற்கு வைப்பதற்காக அவருடைய அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது விஜயகாந்த் அங்கு இல்லையாம். அதனால் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்து விட்டாராம். திருமணம் எல்லாம் முடிந்து ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் பரணியும் அவருடைய மனைவியும் ஏதோ ஒரு பாடல் காட்சிக்காக அங்கு இருக்க அதை தெரிந்து கொண்ட விஜயகாந்த் நேராக அந்த ரெக்கார்டிங் தியேட்டருக்கே போய்விட்டாராம்.

இதையும் படிங்க: மனோஜ் மற்றும் ரோகிணியை கடையை திறந்தாச்சு… கடுப்பில் ரசிகர்கள்… இதெல்லாம் தேவையே இல்லாத ஆணிதான்!

நேராக பரணியின் மனைவியின் கையை பிடித்துக் கொண்டு தயவுசெய்து என்னை மன்னித்துவிடுமா. உங்கள் திருமணத்திற்கு என்னால் வர முடியவில்லை என இருவரிடமும் மன்னிப்பு தெரிவித்துவிட்டு சென்றாராம். இப்படி ஒரு நல்ல மனிதரை மிகவும் இயல்பான ஒரு  மனிதரை நான் இதுவரை இந்த சினிமாவில் பார்த்ததில்லை என பரணி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top