‘நாட்டாமை’ மிக்ஸர் மாமா நியாபகம் இருக்கா? அவர் யார் என்ற ரகசியத்தை போட்டுடைத்த ரவிக்குமார்

Published on: May 28, 2024
nat
---Advertisement---

Nattamai Movie:அந்த காலத்தில் குடும்பபாங்கான சென்டிமென்ட் கலந்த படங்களை எடுப்பதில் மிகச் சிறந்த இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் பல நல்ல திரைப்படங்கள் இந்த தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக சரத்குமார், விஜயகுமார் இவர்களை வைத்து பல படங்களை எடுத்து அதன் மூலம் மாபெரும் வெற்றியும் பெற்று இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

அந்த வகையில் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படம் ரவிக்குமார் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுறையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. சரத்குமாருக்கும் அந்தப் படம் மிகப்பெரிய அளவில் புகழை பெற்று தந்தது. படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. கவுண்டமணி, செந்தில் காமெடி ஆகட்டும் பொன்னம்பலத்தின் வில்லத்தனம் ஆகட்டும் சரத்குமார், மீனா, குஷ்பூ இவர்களின் செண்டிமெண்ட் ஆகட்டும் எல்லாம் கலந்த கலவையாக அந்த படம் மிகச்சிறந்த அளவில் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: இப்ப வாங்கடா எல்லாரும்!.. பாட்டெல்லாம் வேறலெவல்!.. விடுதலை 2-வில் பின்னியெடுத்த இளையராஜா

அதில் கவுண்டமணிக்கு அப்பாவாக செந்தில் நடித்திருந்தது ஒரு புதுமையான முயற்சியாகும். அதுவும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக கவுண்டமணிக்கு பொண்ணு பார்க்க போகும் சீனில் அங்கு செந்திலின் முன்னாள் காதலியாக அந்தப் பெண்ணின் அம்மா இருப்பார். அது கவுண்டமணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் அந்த சீனில் ஒரு பெரியவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். அவர் யார் என்பதை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்தவராம் அந்த நபர். இப்போது ரவிக்குமார் எந்த இடத்தில் லைட் ஆஃப் பண்ணனும் எந்த இடத்தில் லைட் ஆஃப் பண்ணக்கூடாது என்பதை மட்டுமே சொல்ல அதை மட்டுமே அந்த நபர் செய்து கொண்டிருப்பாராம்.

இதையும் படிங்க; வேல ராமமூர்த்தியின் ஒருநாள் சீரியல் சம்பளம் இவ்வளவா? அட என்னப்பா இது?

மற்றபடி அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பாராம். சரி லைட்டை தூக்கிக்கொண்டு அந்தப் பக்கம் வை என்று சொன்னால் வைக்க மாட்டாராம். ஏனெனில் அவருடைய வேலை ஆன் ஆப் செய்வது மட்டுமே என ரவிக்குமாரிடம் வாதிடுவாராம். இதை மனதில் வைத்துக் கொண்டே இருந்தார் ரவிக்குமார். இந்த காட்சிக்கு இப்படிப்பட்ட ஒரு நபர்தான் தேவை என நினைத்து அந்த நபரை இந்த மிச்சர் சாப்பிடும் கேரக்டரில் நடிக்க வைத்திருந்ததாக கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.